சென்னை: பன்னீர்செல்வம் முதல்வர் ஆன பின், இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா. தன்னை முதல்வராக்கிக் கொள்வதற்காக, சசிகலா இந்த கூட்டத்தை கூட்டியிருப்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இரண்டாவது முறையாக, முதல்வர் பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதோடு, பன்னீர்செல்வத்தைக் காட்டிலும், கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் தான் தான் உயர்ந்தவர் என்று காட்டுவதற்காகவே, இப்படியொரு கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்திருப்பதாக, கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக கூறப்படுகிறது.
பயமுறுத்தும் வழக்கு:
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின், மத்திய அரசின் பின்புலத்துடன், பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும், அதன் பின், அந்தப் பதவியில் தான் நிலைப்பதற்காக, தன்னிச்சையாக பன்னீர்செல்வம் செயல்படுவதும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. இதனால், எப்படியாவது முதல்வர் பன்னீர்செல்வத்தை அந்தப் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு, சசிகலாவை, முதல்வராக்கி விட வேண்டும் என்பதில், அவரது குடும்பத்தினர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அதற்காக, அனைத்து வகைகளிலும் காய் நகர்த்தி வருகின்றனர். முதல்வர் நாற்காலி மீது, சசிகலாவுக்கு தீராத காதல் இருந்தாலும், அதில் தன்னை அமர்த்திக் கொள்வதற்கான சரியான தருணம் இது அல்ல என்பதை, அவர் உணர்ந்தே இருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எந்த நேரமும் வந்து, அது தனக்கு எதிராக அமையக்கூடிய சூழல் இருப்பதால், தற்போது முதல்வராக பதவி ஏற்பது சரியல்ல என, சசிகலா நினைக்கிறார். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை விட்டால், இனி ஒரு வாய்ப்பு இப்படி அமையாது. பன்னீர்செல்வம், இன்னும் கொஞ்ச நாளில் தன்னை முழுமையாக நிலை நாட்டி விடுவார் என, குடும்பத்தினர், சசிகலாவுக்கு, முதல்வர் பதவியை நோக்கி செல்லுமாறு, தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர். பன்னீர் மட்டும் அசைந்து கொடுக்காமல் இருப்பதால், உச்ச கட்ட எரிச்சலில் இருக்கும் சசிகலா, கட்சியின் எம்.எம்,ஏ.,க்கள் கூட்டத்தை இரண்டாவது முறையாக, பிப்., 5ல் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்களோடு எம்.எல்.ஏ.,வாக, முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வேண்டும். அவர் மற்ற எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் மதிப்பிழந்து செல்வாக்கு இழக்க வேண்டும் என்பதே, இந்த கூட்டத்தின் முக்கியமான நோக்கம்.
பன்னீர் கண்ணீர்?:
இதையறிந்ததும், பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், தி.மு.க., தரப்பில் பன்னீர்செல்வம் ஆட்சியை காப்பாற்ற உறுதி அளித்துள்ளதால், அவர் தெம்புடன் உள்ளார். பதவி விலகச் சொன்னால், நம்பிக்கை ஓட்டுக் கோரும் முடிவுக்கும் அவர் செல்லக்கூடும் என்பதால், பல்வேறு கணக்குகளையும் போட்டு, சசிகலா தரப்பு அமைதியாகவே, பன்னீர்செல்வத்தை அணுகி வருகிறது. ஆனாலும், கட்சிக்குள் தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம், வழக்கம் போல அவமரியாதைக்குள்ளாக்கப்படுவதோடு, பதவி விலகச் சொல்லி நிர்ப்பந்தமும் அளிக்கப்படலாம். ஆனால், சசிகலாவுக்கு, சட்ட ரீதியிலான நெருக்கடிகள் தீரும் வரையில், அவர் இப்படிப்பட்ட காரியங்களை செய்ய துணிய மாட்டார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. இப்படியெல்லாம் கூட்டம் கூட்டப்படுவதும், முதல்வராக இருப்பவர் அவமானப்படுத்தப்படுவதும், ஆளும்கட்சி சீனியர் தலைவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
English Summary:
Chennai: After Panneerselvam became CM, for the second time MLAs are meeting AIADMK general secretary appointed Shashikala. Itself chief minister to, Shashikala the crowds increased, the MLAs on the part of the hottest, the second time, the first Paneerselvam be humiliated because of its pannircelvattam than, the party's general secretary was the greatest that the show, such a meeting Shashikala of calling party sources said the busier