புதுடில்லி : ‛கேரள எம்.பி., அகமதுவின் மரணம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, காங்கிரஸ், புரட்சிகர சோசலிச கட்சி ஆகியவை லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளன.
எம்.பி., மரணம் :
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான ஜனவரி 31 ம் தேதி, கேரள எம்.பி.,அகமது அவையில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, மாரடைப்பால் பிப்ரவரி 1ம் தேதியன்று அதிகாலை காலமானார். இதனையடுத்து பட்ஜெட்டை பிப்.,1 ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்; அவையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, கூச்சல் குழப்பத்திற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் :
இந்நிலையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்ட வர வேண்டும் என பிப்., 3 ம் தேதி காங்., உறுப்பினர் வேணுகோபால் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்தார். அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா, இன்று மீண்டும் கூட உள்ளது. இந்நிலையில் வேணுகோபால் தரப்பில் இன்று மீண்டும் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து புரட்சிகர சோசலிச கட்சியும் லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.
English Summary:
NEW DELHI: The 'Kerala MPs have come up with a resolution postponing the death of Ahmed as the Congress, the Revolutionary Socialist Party have given notice in the Lok Sabha.