ஜெயலலிதாவுக்குப் பின், அவர் வசித்த போயஸ் தோட்டத்தை நிர்வகித்து கொண்டிருந்தார் சசிகலா. தற்போது அவர் ஜெயிலுக்குப் போய்விட்ட சூழ்நிலையில், போயஸ் தோட்டத்தை நிர்வகிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாருக்கு செல்லும்?
இது குறித்து போயஸ் தோட்டத்து வட்டாரங்களில் கூறியதாவது:
ஜெயலலிதா பெயரில் இருக்கும் போயஸ் தோட்டம் இல்ல பராமரிப்பை, இது நாள் வரையில் சசிகலா கவனித்து வந்தார். ஜெயலலிதா இறந்து போன நிலையில், போயஸ் தோட்டம் இல்லம் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., வட்டாரத்திலும், பொது மக்களிடம் இருந்தும் எழுந்துள்ளது.
அச்சத்தில் சசிகலா தரப்பினர்:
இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், போயஸ் தோட்டம் இல்லம் குறித்தெல்லாம் கேள்வி எழுப்ப, அவரது ஆதரவாளர்கள், திடீரென, போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டு, அதை கைப்பற்ற முயற்சிக்கலாம் என, சசிகலா தரப்பினர் அச்சம் கொள்ள ஆரம்பித்தனர். இதனால், வழக்கமாக இல்லாத அளவுக்கு, பிரைவேட் செக்யூரிட்டிகளும், கட்சிக்காரர்களும் போயஸ் தோட்டத்தில் குவிக்கப்பட்டனர். 24 மணி நேரமும், போயஸ் தோட்டம் இல்லத்தை பாதுகாத்து வருகின்றனர்.
சசியின் உறவினர்கள்:
ஜெயலலிதா இறந்து போனது முதல், சசிகலாவின் அனைத்து உறவினர்களும், போயஸ் தோட்டம் இல்லம் வந்து விட்டனர். அவர்களில், தினகரன், வெங்கடேஷ் இருவரை மட்டும், காலை முதல் மாலை வரை போயஸ் தோட்டத்திலேயே தங்கி, தீவிர அரசியலில் ஈடுபட வைத்தார் சசிகலா. அவ்வப்போது, சசிகலாவின் கணவர் நடராஜனும் இங்கு வந்து போனார். ஆனால், அவர், நிரந்தரமாக இருக்கவில்லை.
நினைவிடம் ஆகுமா:
இதற்கிடையில், சசிகலா ஜெயிலுக்குப் போய்விட, கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆக்கப்பட்டிருக்கும் டி.டி.வி.தினகரனை, போயஸ் தோட்டத்திலேயே தங்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா. ஏற்கனவே, போயஸ் தோட்டத்தை, ஜெயலலிதா நினைவிடமாக்கும் முயற்சியில் முதல்வர் பன்னீர்செல்வம் தீவிரமாக இருப்பதால், அப்படியொரு அறிவிப்போ, அல்லது பொதுமக்கள், சசிகலா அதிருப்தி அ.தி.மு.க.,வினர் மூலம் போயஸ் தோட்டத்தை முற்றுகையிடக் கூடும் என அச்சம் இருப்பதால், அதை எதிர்கொள்வது குறித்தும், தினகரனுக்கு, சில யோசனைகளை சசிகலா சொல்லியுள்ளார்.
சட்ட ஆலோசனை:
இதற்கிடையில், எந்த அறிவிப்பென்றாலும், சட்ட ரீதியில் அதை எதிர்கொள்வது குறித்தும், அவ்வப்போது, சட்ட ஆலோசனையிலும் தினகரன் இறங்கி உள்ளார். எப்படி இருந்தாலும், போயஸ் தோட்டம் இல்லத்தை விட்டுவிடக் கூடாது என்பதில், சசிகலாவும், அவரது உறவினர்களும் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
English summary:
Jayalalitha then, he had lived Shashikala managed Poes Garden. Now he who was
Jayalalitha circumstances, raising the question of who will manage Poes Garden