சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை கூட்டம்:
சசிகலாவுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, புதிய முதல்வராக பொறுப்பேற்ற, இடைப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று(பிப்.,18) சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.
82வது இடம்:
இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பன்னீர்செல்வத்திற்கு, மூன்றாவது வரிசையில், முன்னாள் அமைச்சர்களை அடுத்து, 82வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை, சட்டசபை செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்து விட்டனர்.