சென்னை: சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனக்கூறி தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை மீது ஏறியும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை சேதமடைந்தது. மைக் உடைக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள், சபாநாயகர் தனபாலை பத்திரமாக அழைத்து சென்றனர். சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதமடைந்தது. தொடர்ந்து சட்டசபை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை துவங்கியது.
Saturday, 18 February 2017
சட்டசபையில் நாற்காலி வீச்சு; ரகளை
சென்னை: ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் தனபால் இருக்கையை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து ஆவேசமுற்ற திமுக. எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி எறிந்தனர்.
ரகசிய ஓட்டெடுப்பு வேண்டும் எனவும் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர். தி.மு.க., எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா, ரவிச்சந்திரனும் இருக்கை மீது ஏறி முழக்கமிட்டனர். காகிதங்களை கிழித்து எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

ரகசிய ஓட்டெடுப்பு: சபாநாயகர் நிராகரிப்பு
சென்னை: சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கை வைத்தனர். ஆனால், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். எவ்வாறு ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை எனவும் கூறினார். வேறொரு நாள் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையையும் நிராகரித்த சபாநாயகர், கூவத்தூர் ரிசார்ட் குறித்து செம்மலை பேசியதையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார். கவர்னர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டு இன்றைய சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என தனபால் தெரிவித்தார்.
மக்களின் கருத்தை கேட்ட பிறகு ஓட்டெடுப்பு: ஓ.பி.எஸ்.
சென்னை: சட்டசபையில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: மக்கள் கருத்தை கேட்டு மற்றொரு நாளில் சட்டசபையை கூட்டி நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். மக்கள் கருத்தை கேட்க அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். மக்களின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நட்ராஜ் கோரிக்கை:
சட்டசபையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாவது: மக்களை சந்திக்க எம்.எல்.ஏ.,க்களை அனுமதிக்க வேண்டும். மக்களின் கருத்து கேட்ட பிறகே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும்: ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: ரகசிய ஓட்டெடுப்பு மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்றும். 15 நாள் உள்ள நிலையில், அவசரமாக நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்துவது ஏன்? நம்பிக்கை ஓட்டெடுப்பை வேறொரு நாள் நடத்த வேண்டும். இன்று நடத்தக்கூடாது என்றார்.
கேள்வி:
முன்னதாக, சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.,க்கள் வேலூர் சிறைக்கைதிகள் போல் அழைத்து வரப்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் என்ன சிறைக்கைதியா எனவும் கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கை:
தி.மு.க.,வின் துரைமுருகன் பேசுகையில், ஸ்டாலின் காரை போலீசார் சோதனை செய்தது ஏன்? சோதனை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை குறித்து விளக்கமளிக்க வேண்டும். அசாதாரண சூழல் நிலவுவதால் அனைவரும் பேச வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது பேசிய சபாநாயகர் தனபால், உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்

சட்டசபையில் கடும் அமளி
சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று துவங்கியது.
அப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., செம்மலை பேசினார். ஓ.பி.எஸ்., ஆதரவு உறுப்பினர்களுக்கு மைக் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்தி தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது

உத்தராகண்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் : முதல்வர் நம்பிக்கை
டேராடூன் - உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டி:
உத்தராகண்டில் 69 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்த லின்போது ஆ
ளும் காங்கிரஸுக் கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
நிலையான ஆட்சி:
இந்நிலையில் முதல்வர் ஹரீஷ் ராவத், டேராடூனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 15-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியாக மக்கள் வாக்கு அளித்ததற்கு நன்றி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். மாநிலத்தில் நிலையான ஆட்சியை காங்கிரஸ் வழங்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பணத்தை நம்பி போட்டியிட்டது. அந்தக் கட்சி தோல்வியைத் தழுவுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.