சென்னை : தமிழகம் முழுவதிலும் அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு :
சட்டசபையில் பிப்ரவரி 18 ம் தேதி நடந்த அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 122 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வழக்கத்தை விட அதிகமாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஈரோடு புதுப்பாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது