சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் நடந்தது எப்படி என்பதை ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூலம் விசாரிக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச், 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அ.தி.மு.க., தொண்டரான சென்னை, அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‛ஜெயலலிதா மரணம் நடந்தது எப்படி என்பது குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூலம் விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். இது குறித்து தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இச்சூழ்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛ இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படியே, ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் தான், அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை மார்ச், 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது