சென்னை: மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் இலாகா வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் இடைப்பாடி பழனிசாமியிடம் இருந்த நிதி, திட்டம். ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் துறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி துறை, ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் தான் பட்ஜெட் தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு முதல்வர் பழனிச்சாமி இழந்தார்.
Friday 24 February 2017
10 , பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
சென்னை : மே 12 ம் தேதி பிளஸ் 2 , மே 19 ம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் 29ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30ம் தேதியும் நடக்கும் என்றும் கூறினார்.
தீபக் போர்க்கொடி: சசிகலா அதிர்ச்சி
சென்னை: சசிகலாவுக்கு எதிராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் போர்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு ஆங்கில சேனலில் வெளிவந்த தகவல்:
சசிகலா வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளது ஜெ., அண்ணன் மகன் தீபக்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமனம் செய்யப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
சென்னை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் தனக்கும் தனது சகோதரி தீபாவிற்கும் சொந்தமானது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நல்லவர்; முதல்வராக அவர் சிறப்பாக செயல்பட்டார் . துணை பொதுசெயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது. ஆனால் சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சிலை கடத்தல்: கடலூரில் 5 பேர் கைது
சென்னை: கடலூரில் ஐம்பொன் விநாயகர் சிலையை திருடி கடத்த முயன்ற ஐந்து பேரை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிலை திருட்டு:
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் அருகே உள்ள மங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்ராஜா. இவர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து ஒன்றரை அடி உயரமுள்ள வினாயகர் சிலையை திருடியுள்ளார். அந்த சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய, புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை , கடலூரை சேர்ந்த முகுந்தன் சர்மா என்பவர் மூலம் தொடர்பு கொண்டார். இவர்கள் கடலூரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
கடலுாரில் சுற்றிவளைப்பு:
அதன்படி ஹோண்டா சிட்டி காரில் ராஜா, மயிலாடுதுறையை சேர்ந்த வினோத், தரங்கம்பாடியை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோர் கடலூருக்கு வந்தனர். அரியாங்குப்பத்தில் இருந்து ஞானசேகரன் ஒரு காரில் கடலூர் வந்தார். அவர்கள் முகுந்தன் சர்மாவை கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மற்றும் போலீசார் கடந்த, இரண்டு நாட்களாக கடலூரில் தங்கியபடி கண்காணித்து வந்தனர். இன்று, ஐந்து பேரையும் கடலூரில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐம்பொன் விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். அந்த சிலையின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

20 ஆண்டு வரலாறு காணாத தோல்வி; மகாராஷ்ட்டிர தேர்தலில் காங்கிரசுக்கு அடி
மும்பை: மகாராஷ்ட்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. 10 மாநகராட்சிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும், கடந்த கால வெற்றியை விட கூடுதல் இடங்களை பிடித்துள்ளது. மேலும் முக்கிய கட்சிகளான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் பெரும் கூட்டணி எதுவும் அமைக்காமல் தேர்தலை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவ சேனாவும் , பா.ஜ., வும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் வெறும் 20 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நாசிக்கில் மொத்தம் உள்ள 151 வார்டுகளில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே பிடிக்கிறது. புனே, தானேயில் காங்கிரஸ் ஒரு வார்டாவது பிடிக்குமா என்ற நிலையே நிலவுகிறது.
பொய்யாகிப்போனது:
மோடியின் சமீபத்திய 500 1000 ரூபாய் நோட்டுகள் அழிப்பு, புதிய ரூபாய் அறிமுகம் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற காங்கிரஸ் பிரசாரம் பொய்யாகிப்போனதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே மகாராஷ்ட்டிராவில் பல முறை ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இது வரை கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இது காங்கிரஸ் தன் நிலையை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்கின்றன மீடியாக்கள்.

தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
சென்னை: ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர் ‛குட்லக்' ராஜேந்திரனை, தங்கம் கடத்திய விவகாரத்தில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவராக இருப்பவர் குட்லக் ராஜேந்திரன். திருச்சி - புதுக்கோட்டைக்கு இடையே லட்சுமணப்பட்டி சுங்கசாவடியில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமான டிஎன் 07 பிக்யூ 8485 என்ற பதிவு எண் கொண்ட நிசான் மைக்ரா காரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கடந்த, 22ம் தேதி சோதனை செய்தனர்.
12 கிலோ தங்கம்:
அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இந்த தங்கம் குட்லக் ராஜேந்திரனுடையது என பிடிபட்ட காரின் டிரைவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் குட்லக் ராஜேந்திரனின் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் வீடு சோதனையிடப்பட்டது.
அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது, குட்லக் ராஜேந்திரன் அவர் வீட்டு எதிரிலேயே தப்பி ஓடி, தடுக்கி விழுந்து இடது கையை முறித்துக் கொண்டார். அவருக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவுக் கட்டு போடப்பட்டது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: கருணாஸ் கதறல்
சென்னை: ‛ நான் இறந்து விட்டதாக, ‛வாட்ஸ் ஆப்'பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர்' என, நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகர் கருணாஸ், திருவாடானை தொகுதியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.முக்குலத்தோர் புரட்சி படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். தமிழகத்தில், சசி அணிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இன்று அளித்த புகார்:
அரசியல் மட்டும் சினிமா துறையில் என் வளர்ச்சியை கண்டு பொறாமை அடைந்துள்ளவர்கள் சமூக வலைதளங்கில் என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த பிப்., 22ம் தேதி எனது பிறந்த நாள். அன்று ‛வாட்ஸ் ஆப்'பில் ஒரு தகவல் பரவியது. நான் திடீரென இறந்து விட்டதாக கூறி, கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அதில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து என் மனைவி கடும் வேதனை அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு உரிய சிகிச்சையும் பெற்று உள்ளார். என்னை பற்றி அவதூறு தகவல்களை வெளியிட்டு வருபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கருணாஸ் புகாரில் கூறியுள்ளார்.