சென்னை: முதல்வர் பழனிச்சாமி அறிவித்தபடி, தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் இன்று(பிப்.,24) முதல் மூடப்படுகின்றன. அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கையெழுத்து:
தமிழக முதல்வராக பிப்., 16ல், இடைப்பாடி பழனிசாமி, பதவியேற்றார். 18ல், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார். தொடர்ந்து ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பும் ஒன்று. இந்நிலையில் இன்று(பிப்.,24) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மேலும் அவற்றுடன் இணைந்த 169 பார்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு மாற்றுப்பணி:
மூடப்படும் டாஸ்மாக் கடையில் பணியாற்றும் உபரி ஊழியர்களுக்கு, டாஸ்மாக் நிறுவனத்திலேயே வேறு பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக மூடப்படும் கடைகள் விவரம்:
சென்னை மண்டலம்: 105 டாஸ்மாக் கடைகளும், 63 பார்களும் மூடப்படுகின்றன.
கோவை மண்டலம்: 44 டாஸ்மாக் கடைகளும், 20 பார்களும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலம்: 119 டாஸ்மாக் கடைகளும், 23 பார்களும் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலம்: 99 டாஸ்மாக் கடைகளும், 37 பார்களும் மூடப்படுகின்றன.
சேலம் மண்டலம்: 133 டாஸ்மாக் கடைகளும், 26 பார்களும் மூடப்படுகின்றன.