மார்ச் - வறட்சி நிவாரண நிதி இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பருவநிலை 2016 என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்மேலாண்மை ஆணையர் சத்யகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக 32 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் 2,247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த பணியானது நாளை மாலைக்குள் நிறைவடையும், அதன்பின்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடையாக நிவாரண நிதி செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.