சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரபதிவுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர், தனக்கு மிரட்டல் வருவதாக ஐகோர்ட்டில் புகார் தெரிவித்துள்ளார்.
மறுப்பு:
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப் பதிவு செய்யவும், 2016 செப்., 9ல், தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் வணிகர்கள், நில உரிமையாளர்கள் என, பலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்யவும், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க ஐகோர்ட் மறுத்து விட்டது.
அனுமதி:
இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேந்திரன், ரியல் எஸ்டேட் அதிபர்களிடமிருந்து மொபைல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக தலைமை நீதிபதியிடம் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர, ராஜேந்திரனுக்கு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.