புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு பிறகு, எதிர்பார்த்ததற்கு மாறாக, 2016 - 17 ஆண்டில் நாட்டின் 4வது காலாண்டு ஜி.டி.பி., (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, நவ.,9 ம் தேதி முதல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவி்த்தார்.
ரூபாய் நோட்டு வாபஸ்:
இந்திய பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இத்திட்டம் அடிதளமாக அமையும் என சொல்லப்பட்டது. இத்திட்டத்தால், அடுத்த சில மாதங்களுக்கு பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவில் மந்தமாக இருக்கும் எனவும் பின்னர் அது பெரிய அளவில் வளர்ச்சி அடையும் எனவும் கூறப்பட்டது.
7.1% ஆக இருக்கும்:
இந்நிலையில், 2016 - 17 நிதியாண்டின் நாட்டின் 4வது காலாண்டு(ஜன.,-மார்ச்) ஜி.டி.பி., வளர்ச்சி 7.1% ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் எதிர்பார்க்கிறது. இதற்கு முந்தைய காலாண்டு(அக்.,-டிச.,) வளர்ச்சி 7.0% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பில்லை:
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தால் தற்காலிக பணத் தட்டுபாடு நிலவியது. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்பட்ட நிலையில் பணத் தட்டுபாட்டால் பொருளாதார வளர்ச்சியில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.