ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்திரிகையாளர்களிடம் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மக்கள், விவசாயிகள் வேண்டாம் என சொன்னால், அதனை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த திட்டம் கடந்த 2006ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்துள்ளேன். ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது. இந்த திட்டத்திற்காக மோடி அரசை யாரும் குறைகூறக்கூடாது.வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் தனித்து நிற்க வேண்டும். பா.ஜ., இதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Thursday 2 March 2017
தாமிரபரணியில் குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க ஐகோர்ட் அனுமதி
மதுரை: தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோகோ கோலா நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பிரபாகரன், அப்பாவு ஆகியோர் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தினர் மனுதாக்கல் செய்தனர். உபரியாக செல்லும் நீரை தான் பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை கோரிக்கையை ஏற்று, தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாக்: இந்தியா கண்டனம்
ஜெனிவா: சர்வதே பயங்கரவாதத்திற்கே மையப்புள்ளியாக பாகிஸ்தான் உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா குற்றம்சாட்டியது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவு:
சர்வதேச மனித உரிமை குழுவின் 34வது கூட்டத்தில், இந்திய தூதர் அஜித்குமார் பேசியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்தும் காஷ்மீரில் நிலவும் அமைதியான சூழ்நிலையை கெடுத்து வரும் பாகிஸ்தான், அங்கு வன்முறையை தூண்டிவிட்டும் ஆதரவு அளித்தும் வருகிறது. பயங்கரவாதம், படுமோசமான மனித உரிமை மீறல் ஆகும். பயங்கரவாதத்திற்கு மையப்புள்ளியாக விளங்கும் நாடு தற்போது மனித உரிமை பற்றி பேசுகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது. தற்போது, அவர்களாலேயே பாகிஸ்தான் அவதிப்பட்டு வருகிறது.
நடவடிக்கை:
பாகிஸ்தான் ஆதரிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதமே, காஷ்மீரில் பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம். பல ஆண்டுகளாக செய்ததை போல் தற்போதும், காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்து அமைதியை சீர்குலைக்க பார்க்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. யாரும் இதில் தலையிட முடியாது. பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், அமைதியை நிலைநாட்ட, இந்திய அரசும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் நடவடிக்கை எடுத்தன. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிளஸ் 2 தேர்வு எழுதும் சிறை கைதிகள்
சென்னை : சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள 98 சிறை கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
அதன்படி, புழல் சிறையில் தண்டனை கைதிகள் 20 பேர், விசாரணை கைதிகள் 4 பேர், திருச்சியில் இருந்து 15 பேர், கோவையில் இருந்து 13 பேர், மதுரையில் இருந்து 11 பேர், வேலூரில் இருந்து 8 பேர், சேலத்தில் இருந்து 9 பேர், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேர், கடலூரில் இருந்து 3 பேர், புதுக்கோட்டையில் இருந்து 5 பேர் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

பெங்களூரிலும் தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு : தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில தலைநகர்பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு :
வரும் மே மாதம் முதல் பெங்களூரு நகரம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள உள்ளது. மே மாதம் முதல், ரேஷன் முறையிலேயே தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள முக்கியமான 9 அணைகளில் 20 சதவீதத்திற்குள் குறைவாக நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடக முழுவதற்கும் தண்ணீர் சப்ளை செய்வதற்கு கூடுதலாக டேங்கர் லாரிகளும், போர்வெல்களும் தேவைப்படுகின்றன.
அடுத்து பருவமழை பெய்யும் வரை கர்நாடகாவில் இதே நிலை தான் நீடிக்கும் என கூறப்படுகிறது. நிலைமை சரியாகும் வரை ரேஷன் தண்ணீர் சப்ளை முறையே தொடரும் என கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு மக்கள் கோடை துவங்குவதற்கு முன்பாகவே தண்ணீர் தட்டுப்பாடு பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

மத்திய அரசில் 2.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள்
புதுடில்லி : மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை போன்று 2.80 லட்சம் ஊழியர்களை கூடுதலாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு, வருமான வரித்துறை உள்ளிட்ட முக்கிய வரி வசூல் துறைகளில் கூடுதலாக ஆட்கள் தேவைப்படுகிறது. இதனால் சுங்க வரி, கலால் வரி, வருமான வரி உள்ளிட்ட துறைகளில் 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 46,000 முதல் 80,000 பேரை கூடுதலாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது சுங்க துறையில் 50,600 பேரும், கலால் துறையில் 91,700 பேரும் பணியாற்றி வருகின்றனர். விரைவில் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி துறைக்கு 41,000 பேர் வரை தேவை.
ரயில்வே துறை ஊழியர்கள் எண்ணிக்கையில் 2018 ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப் போவதில்லை என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் விண்வெளி, அணுசக்தி, அமைச்சரவை செயலகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகங்கள், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று காலை (மார்ச் 2) துவங்கின. மொத்தம் 2427 மையங்களில் தேர்வுகள் நடந்து வருகின்றன.
ப்ளஸ் 2 தேர்வுகள் :
இன்று துவங்கி, மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கும். மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கி 1 மணி வரை தேர்வுகள் நடக்கும். தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் இருக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தேர்வுப்பணியை பார்வையிட உள்ளனர்.
காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படுவது குறித்தும் எச்சரிக்கை நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.