புதுடில்லி: அமெரிக்காவில் இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
தாக்குதல்:
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஹர்னீஸ் படேல் என்ற தொழிலதிபர் கொல்லப்பட்ட நிலையில், இன்று கெனட் நகரில்சீக்கியர் ஒருவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கூறி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆறுதல்:
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: இது போன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான தீப் ராய் தந்தை சர்தார் ஹர்பல் சிங்கிடம் பேசினேன். அவருக்கு ஆறுதல் கூறினேன். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல் நலம் தேறி வருவதாகவும் கூறினார். அமெரிக்காவில் நேற்று ஹர்னீஸ் படேல் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
அமெரிக்க தூதர் கண்டனம்:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மார்கெ கார்ல்சன் : இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. கண்டனத்திற்குரியது. அருவறுக்கத்தக்க செயல்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: The United States is constantly being attacked by Indians Affairs Minister Sushma Swaraj said with regret.