புதுடில்லி : ஏப்ரல் மாதம் நடக்கும் டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டிற்குள் டில்லி, லண்டனை போல் மாறும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உரிமைக்காக போராடுகிறேன் :
டில்லி உத்தம் நகர் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், தற்போதுள்ள மாநகராட்சி ஊழியர்கள் தலைநகரை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. கேட்டால், கெஜ்ரிவால் எல்லாவற்றிற்குள் சண்டையிடுகிறார் என கூறுகிறார்கள். ஆம், நான் சண்டையிடுவது உண்மை தான். அது என் மனைவிக்காகவோ, குழந்தைகளுக்காகவோ இல்லை. நான் உங்களின் உரிமைகளுக்காக போராடுகிறேன்.
டில்லி, லண்டனாக மாறும் :
நீங்கள் சொல்லுங்கள், நான் உங்களுக்காக போராடவா, வேண்டாமா? நான் துப்புரவு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், துணைநிலை ஆளுநர் அதை நிராகரித்து விட்டார். மாநகராட்சியில் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது. டில்லி மாநகராட்சி ஆம்ஆத்மி வசம் வந்தால், இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு டில்லி தூய்மையாகும் என உறுதி அளிக்கிறேன். அடுத்த ஓராண்டில் டில்லியை லண்டனுக்கு நிகரான நகராக மாற்றுவோம் என்றார்.
English summary:
NEW DELHI: Delhi civic polls will be held in April next year to win the AAP Delhi, Delhi Chief Minister Arvind Kejriwal has said that London will become like.