புதுடில்லி : பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் விவகாரம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோர்ட் நோட்டீஸ் :
கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31, 2017 வரை மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 31, 2016 வரை அனைத்து வங்கிகளிலும், அதன் பிறகு மார்ச் 31, 2017 வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஷரத் மிஸ்ரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.எஸ்.கேகர் தலைமையிலான பெஞ்ச், ஷரத் மிஸ்ரா தாக்கல் செய்துள்ள மனுவின் நகலை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மனு மீது பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: In the case of the old notes will change to respond to the issue, the Supreme Court issued notice to the central government and the Reserve Bank.