ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் பலியானார்.
துப்பாக்கிச்சூடு:
இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்கரை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்சோ(22) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன. அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை திரும்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 ஆண்டிற்கு பின் உயிரிழப்பு:
இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நடைபெறவில்லை, ஆனால் தற்போத மீனவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரை வந்தது உடல்:
பலியான மீனவர் பிரிட்சோ வின் உடல் ராமேஸ்வரத்திற்கு வந்தது. அவரது உடல் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பிரிட்சோ வின் உடலை எஸ்.பி. மணிவண்ணன் நேரில் பார்வையிட்டார்.
குண்டு மழை பொழிந்தனர்.:
துப்பாக்கி சூடு சம்பவம் ஆதம்பாலம் பகுதியில் நடந்தது. இலங்கை கடற்படையினர் குண்டுமழைகளை பொழிந்தனர். அதனால் நாங்கள் உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம். தாக்குதல் நடந்த பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபடவில்லை.
English Summary:
Rameswaram: Sri Lankan Navy Rameswaram fishermen killed in the crossfire.