சென்னை: ‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் கூறியுள்ளார்.சென்னையில், இன்று(மார்ச்7) ரவிசங்கர் உள்ளிட்ட டாக்டர்கள் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்துள்ளார். கடினமான பணியால் அவருக்கு மன அழுத்தம் இருந்து இருக்கலாம். தனது உடல் நிலையை அவர் சரியாக கவனிக்காமல் விட்டு இருக்கலாம். மோசமான உடல் நிலையில் தான் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் அறிக்கை அளித்துள்ளனர். அவருக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் தவறான சிகிச்சை அளித்து இருக்க வாய்ப்பு இல்லை. சமூக வலை தளங்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தவறான தகவல்கள் வெளியாகின. சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: '' The Late Chief Minister Jayalalithaa, 31, doctors treated. Treatment is not involved in politics, '' the Indian Medical Association state president said T.N.Ravish
ankar.
English summary:
Chennai: '' The Late Chief Minister Jayalalithaa, 31, doctors treated. Treatment is not involved in politics, '' the Indian Medical Association state president said T.N.Ravish
ankar.