வாஷிங்டன்: ஆப்கன், வங்கதேசம், பாகிஸ்தானுக்கு செல்லும் அமெரிக்கார்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்தியாவிலும் பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.
அபாயம்:
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் அமெரிக்க மக்களை தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. அமெரிக்கர்கள் என்பதாலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.
தொடர்ச்சியாக...:
ஆப்கனில் கடத்தல், பிணைக்கைதிகளாக பிடித்து செல்லுதல், தற்கொலைப்படை தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நிலையற்ற தன்மை நிலவுவதால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாகிஸ்தானில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அரசு அதிகாரிகள், மனிதாபிமான குழுக்கள், சட்டத்துறை அதிகாரிகள் என பலர் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.அமெரிக்கர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தாக்குதல் நடத்தலாம். இந்தியாவிலும் பிரச்னைக்குரிய பிரிவினைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.