புதுடில்லி : அமெரிக்க சென்றால் கொல்லப்படலாம் என்ற பயம் காரணமாக ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க பயணங்களை ரத்து செய்தும், ஒத்திவைத்தும் வருகின்றனர்.
அச்சத்தில் இந்தியர்கள் :
அமெரிக்கா சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்டுக்கு 1 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மர்ம நபரால் சுடப்பட்ட மற்றொரு இந்தியர், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த 3 சம்பவங்களிலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என கூச்சலிட்டுள்ளனர்.
அமெரிக்கா செல்ல தயக்கம் :
இதனால், அமெரிக்கா சென்றால் தாங்கள் தாக்கப்படுவதுடன் கொல்லப்படலாம் என அஞ்சுவதாக இந்தியர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவுக்கு இந்திய அரசு சார்பில் சுற்றுலா எச்சரிக்கை ஒன்றும் விட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜூக்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியார்கள் அமெரிக்கா செல்ல அஞ்சுவதுடன், அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசிக்கும் உறவினர்களின் நிலை என்ன ஆகுமோ எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கன்சாசில் கொல்லப்பட்ட ஸ்ரீநிவாசின் இறுதிச்சடங்கின் போது அவரது பெற்றோர்கள், நாட்டில் உள்ள பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
English summary:
NEW DELHI: The fear of being killed by US-led trips canceled due to the large number of American Indians, are defer.