புதுடில்லி: சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால், அபராதம் வசூலிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கியிடம், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
பாதிப்பு:
'சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகை பேணாத வாடிக்கையாளர்களிடம், ஏப்., 1 முதல், 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்' என, பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இதனால், அந்த வங்கியின், 31 கோடி சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் உண்டானது.
வேண்டுகோள்:
இந்நிலையில், அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக, 5,000 ரூபாயை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம், 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கும் திட்டத்தை, மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பணப் பரிவர்த்தனை, ஏ.டி.எம்., மூலம் பணம் எடுத்தல் ஆகியவற்றின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளையும் மறுபரிசீலனை செய்யும்படி, பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
எச்.டி.எப்.சி., - ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட சில தனியார் வங்கிகள், ஒரு மாதத்தில், நான்கு முறைக்கு மேல், பணப்பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், குறைந்தபட்சம், 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கத் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
NEW DELHI: In a savings account, the minimum balance the penalty charge to reconsider its decision, with State Bank of India, the Central Government is emphasized.