ஜகர்த்தா : தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அதிபரிடம், இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி பேசினார். அப்போது, இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
அன்சாரி பேச்சு :
இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் நடக்கும் இந்திய பெருங்கடல் ரிம் கழகத்தின் (ஐ.ஓ.ஆர்.ஏ) இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய துணைஜனாதிபதி சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்த அன்சாரி, நேற்று தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பேசி உள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு :
அப்போது பேசிய சிறிசேனா, இச்சம்பவம் தொடர்பாக இலங்கை படைத்தளபதியிடம் நான் பேசினேன். இலங்கை கடற்படை சார்பில் அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படை அடிக்கடி இது போன்று நடந்து கொள்வதாக அன்சாரி, சிறிசேனாவிடம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கை கடற்படையால் 76 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் அன்சாரி, சிறிசேனாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.
English summary:
Jakarta: piritjo Nadu fishermen by the Sri Lankan navy shot over to the President of Sri Lanka, the Indian Vice President Ansari said. Then, about the incident that he had ordered a full investigation and said Sri Lankan President ciricena.