புதுடில்லி : மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஜ்வாலா ' திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச காஸ் இணைப்பு திட்டத்திற்கும் இனி ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆதார் அவசியம் :
மானிய விலை சமையல் காஸ் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து காஸ் மானியம் பெறுவோர் அனைவரும் தங்களின் ஆதார் எண்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச காஸ் இணைப்பிற்கும் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜ்வாலா திட்டத்தின்படி 5 கோடி ஏழை பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இலவச சமையல் காஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் இலவச காஸ் பெறுவோர் அனைவரும் தங்களின் ஆதார் எண் சான்றை அளிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.
English summary:
New Delhi: The central government 'Pradhan Mantri Jwala' program distributed free to poor women Aadhaar number is no longer necessary to plan and said that the gauze patch.