தற்போது இயக்கத்தில் இல்லாத கோலார் தங்கச் சுரங்கத்தில் பல தசாப்தங்களுக்கும் மேலாக மண்ணில் புதைக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகு குழாய்களுக்கும் பூமியின் காந்த வெளியில் இருக்கும் சூரிய புயலைப் பற்றிய பரப்பான அறிவியல் கண்டுபிடிப்பிற்கும் என்ன தொடர்பு?
ஆம் நிறைய தொடர்பு உள்ளது.
மிக குறிப்பிடத்தக்க அறிவியல் ஆய்வில் 3,700க்கும் மேலான அம்மாதிரியான குழாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பூமியின் காந்த பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்ட கசிவிற்கு பிறகு நடந்த நிகழ்வின் பதிவை இந்திய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்று சேர்ந்த சர்வதேச படைப்பாக வழங்கினர்
உதகையில் உள்ள காஸ்மிக் கதிர் ஆய்வகத்தில் உள்ள உலகில் மிகப்பெரியதாக கருதப்படும் கிரேப்ஸ்-3 முயான் தொலைநோக்கியை கொண்டு
22 ஜூன் 2015 ஆம் தேதி இரண்டு மணி நேரத்திற்கு வளிமண்டலத்தை படையெடுத்த அண்டக் கதிர்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்,
சூரியனிலிருந்து உருவாகும் மின்னூட்ட துகள்கள் பூமியை அதிக வேகத்தில் உரசுவதன் காரணமாக இந்த காந்தக லன் கசிவு ஏற்படுகிறது.
அதிக வேகத்தில் வரக்கூடிய அம்மாதிரியான சூரிய வளிமண்டல புயல்கள், செயற்கைக்கோள் மற்றும் தானியங்கி விமானங்கள் மீது மோதி பேரழிவை ஏற்படுத்தும் மின் தடைகளை ஏற்படுத்தி, மீண்டும் நம்மை கற்காலத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய ஆபத்து உண்டு.
சூரிய வளிமண்டல புயல்கள்:
•சூரிய வளியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காந்த ஆற்றலின் திடீர் வெளிப்பாடு பிரகாசமான ஒளியை ஏற்படுத்தும்
•இது விண்வெளியில் மின்னூட்ட துகள்களை அதிக அளவில் வெளியிடும்.
•இந்த சீரிய "எரிமலை வெடிப்புகள்" ஒளி பெரும் வெளியேற்றம் என்று அழைக்கப்படும்.
•மின்னூட்டப்பட்ட வாயு, பூமியை சுற்றியுள்ள காந்த திரையுடன் மோதும்
•அதனால் பூமியின் காந்த அடுக்கில் ஏற்படும் பதற்றம் சூரிய புயல் என்று அழைக்கப்படும்.
•செயற்கைக்கோள், மின்னனு கட்டங்கள், மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஆகிய தொழிநுட்பங்களை கொண்டு ஆராயலாம்.
•கீழ் நிலையில் பல வண்ண ஒலிக் கதிர்களை உருவாக்கக் கூடும்
•இம்மாதிரியான சூரிய புயல் 1859 -ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அது, தந்தி இணைப்பு தகவல் தொடர்பை கடுமையாக பாதித்தது.
குறைந்த விலை தொலைநோக்கி:
உதகையில் இருக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான காஸ்மிக் கதிர் தொலைநோக்கி, நான்கு தசாப்தங்களுக்கும் பழமையான மறு சுழற்சி செய்யப்பட்ட, துத்த நாகம் பூசப்பட்ட எஃகு குழாய்களால் ஆனது.
"தேவைதான் கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது; நம்மால் புதிய விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியவில்லை என்றால், இருக்கும் வசதிகளை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து செலவுகளை குறைக்கிறோம்.
இந்தியாவின் விஞ்ஞானிகள், அதிக செலவுகள் இல்லாத தீர்வுகளை உருவாக்குவதிலும் மறுசுழற்சி கலையிலும் கைதேர்ந்தவர்கள்"; என்று தெரிவித்தார் அறிவியல் பத்திரிக்கையின் இந்திய செய்தியாளர் பல்லவ பாக்லா
இதற்கு சரியான எடுத்துக்காட்டு, 2014 ஆம் ஆண்டு இந்தியா செவ்வாய்கிரகத்தை அடைந்த கதை. அதற்கான செலவு 4.5 பில்லியன் ரூபாய் ஆகும்; இது அமெரிக்காவின் செவ்வாய்கிரகத்தை ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட மேவென்னை விட 10 மடங்கு குறைந்த தொகையாகும். உதகை ஆய்வகத்தின் ஆண்டு பட்ஜெட் சுமார் 375,000 டாலர்கள் ஆகும்.
உலகின் ஆழமான சுரங்கமாக கருதப்படும், நூற்றாண்டு பழமையான கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கத்தின் குகைகளின் அடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சுமார் இரண்டு தசாப்தங்களான அந்த 6 மீட்டர் நீண்ட குழாய்கள் தொலைநோக்கியின் சென்சார்களாக செயல்பட்டன.
நட்சத்திர மண்டலம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஏற்படும் அதீத ஆற்றல் உராய்வுகளால் உருவாகும் இணை அணு துகள்களான நியூட்ரினோக்களை ஆராயும் இந்திய மற்றும் ஜப்பானிய குழுவிற்கு உதவும் விதத்தில்,பொதுவாக கட்டட கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் அந்த குழாய்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
அதனை பூமிக்கு கீழே 2 கி.மீட்டர் ஆழத்தில் விஞ்ஞானிகள் புதைத்துள்ளனர்.
அதீத உணர்வுதிறன்:
1990களின் ஆரம்ப காலத்தில் தங்க விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததையடுத்து சுரங்கத்தை மூடத் தொடங்கினர், அதனையடுத்து அதிகாரிகள் குழாய்களை அகற்றி அதனை குப்பைகளாக அப்புறப்படுத்த திட்டமிட்டனர். "நாங்கள் எங்கள் சோதனைகளுக்கு அதை மறு உபயோகப் படுத்த விரும்புகிறோம்" என தெரிவித்ததாக இந்த ஆய்வை முன்னடத்தும் விஞ்ஞானிகளில் ஒருவரான குப்தா தெரிவித்தார்.
வானொலி வானியல் மையத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள அந்த மலைப்புற 100 ஏக்கர் இடத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்திற்கு, டிரக் மூலம் 7,500 குழாய்களும் கொண்டு செல்லப்பட்டன.
அந்த மலைப்புறப் பகுதி, மான்கள், புலிகள் மற்றும் காட்டு பன்றிகள் சூழ்ந்த ஒரு காடாக அமைந்துள்ளது.
சமீபத்தில் சிசிடிவி கேமிராக்களில் சென்சார்களை கடந்து புலிகள் நடமாடுவது பதிவாகியுள்ளது.
உயர் ஆற்றல் காஸ்மிக் கதிர்களை பற்றி ஆய்வு செய்ய, அப்புறப்படுத்தப்பட்ட குழாய்களை கொண்டு விஞ்ஞானிகள் முயான் சென்சார்களை உருவாக்கியதை அடுத்து உதகையில் காஸ்மிக் கதிர்களை பதிவு செய்தல் 1998ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது;
உலகின் மிகப்பெரிய முயான் தொலைநோக்கியை கொண்ட உதகை ஆய்வகத்தில் இன்று 3,712 எஃகு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன; அம்மாதிரியான தொலைநோக்கிகள் டஜன் கணக்காக உள்ளன ஆனால் உதகையில் உள்ளதை போன்று சக்திவாய்ந்ததாக இல்லை.
அந்த ஆய்வகத்தில் ஒரு சிறிய விஞ்ஞானிகள் குழு அவர்களுக்கான உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பாளர்கள் மற்றும் தச்சர்கள் ஆகியோர் காஸ்மிக் கதிர் கண்டறியும் கருவியை உருவாக்க தொடர்ந்து பழைய குழாய்களை மறுசுழற்சி செய்து வருகின்றனர்.
சென்சார்களை உருவாக்குதல்:
இதற்காக அந்த குழாய்களை திறந்து உயர் அழுத்த நீர் ஜெட்டுகள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் அந்த குழாயில் நூறு மைக்ரான் அளவை கொண்ட, அதாவது மனித முடியின் அளவு கொண்ட டங்கஸ்டன் கம்பியை பொருத்துவார்கள்; மேலும் இரண்டு பக்கங்களிலும் நீர் புகாத அளவு அது சீல் வைக்கப்படும். அதனையடுத்து அந்த குழாய்கள், மீத்தேன் மற்றும் ஆர்கான் கலவையை கொண்ட வாயுவை வைத்து நிரப்பப்படும். மேலும் அதனை அதிக பயனுள்ள சென்சார்களாக மாற்ற மின்சாரம் பாய்ச்சப்படும்.
உறிஞ்சிகளாக செயல்படும் கான்கீரிட்டிற்கு கீழே, இரண்டு மீட்டர் ஆழத்தில் அவைகள் புதைக்கப்படுகின்றன முயான் தொலைநோக்கியாக உருவாக மலிந்த விலை பொருட்களை கொண்டு பிரச்சனைகளுக்கு புத்திசாலித்தனமான தீர்வை காண்பது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த குழாய்கள் சென்சார்களாக பயன்படுத்தப்படும்.
அந்த பழைய குழாய்கள் கசியவில்லை என்பதை ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் உறுதி செய்ய, ஹீலியம் செலுத்தும் கருவியில், வாயு ஜெட்டின் முனையில் 7 செண்ட் ஊசியை பொருத்தி சிறிய கசிவு சோதனையை நடத்துவதற்கான கருவியாக பயன்படுத்துவர்.
"ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான 10 மறுசுழற்சி குழாய்களை எங்கள் சோதனைக்காக நாங்கள் தயார் செய்கிறோம்.
வலிமையற்ற குறிகளையும் சோதிக்கும் திறன் கொண்ட சக்திவாய்ந்த சென்சார்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இதுவரை இல்லாத அளவு அதிக உணர்திறன் கொண்ட காஸ்மிக் கதிர்களை நாங்கள் அளக்க வேண்டும்" என்று அங்குள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான அடுல் ஜெயின் தெரிவித்தார்.
உள்நாட்டு தயாரிப்பு:
அந்த ஆய்வகம் சொந்த மண்ணின் கண்டுபிடிப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம்.அங்குள்ள பல மின்னணு உபகரணங்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டவை. மேலும் கணிணிகளுக்கான மென்பொருள் உள்ளூரில் தயார் செய்யப்படுகிறது.
தினந்தோறும் காஸ்மிக் கதிர்களால் உருவாக்கப்படும் 40 கிகா பைட் அளவு தகவல், அங்கு உருவாக்கப்பட்ட பல கணிணிகளில் சேகரித்து வைக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அளவிலான பராமரிப்பு கட்டணங்களும் மிச்சப்படுத்தப்படுகின்றன.
பழைய கணிணிகளிலிருந்து பாகங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மின்விசிறிகளை கொண்டு அங்கு தயாரிக்கப்பட்ட குளிரூட்டும் சாதனம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தி கணிணிகளை பாதுகாக்கின்றன.
தற்போது விஞ்ஞானிகள், 17 ஆண்டுகளாக ஆய்வக சென்சார்களில் பதியப்பட்ட காஸ்மிக் கதிர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு, விண்வெளி வானிலை கணிப்புகள் மற்றும் சூரிய வளி மண்டல் புயல் குறித்த முன்னெடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகியவற்றை கண்டறிய இயலுமா என்பதை ஆராயவுள்ளனர்.
17 வருட காலத்தில் 38 கடுமையான சூரிய வளிமண்டல புயல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
"மேலும் தெரிந்து கொள்ள கிடைத்த தகவல்களை பிரித்துப் பார்க்க வேண்டும். அது சூரியனில் இருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட பரிசாகும். ஏனென்றால் அதனைக் கொண்டு விண்வெளி வானிலை தகவலை பற்றி அறிந்து கொள்ள முடியும்" என்கிறார், விஞ்ஞானி குப்தா.