புதுடில்லி : சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்.
கூகுளின் மகளிர் தினம் :
கூகுள் வெளியிட்டுள்ள டூடுலில், பாட்டி ஒருவர் தனது பேத்திக்கு மறக்க முடியாத 13 பெண்களை பற்றிய கதைகளை கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லைட் ஷோ வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த டூடுல் 13 பெண்களை பற்றிய கதைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் கவுரவித்துள்ள பெண்களின் பட்டியலில் அமெரிக்க பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான இடா வெல்ஸ், மெக்சிகோ ஓவியர் பிரிடா கஹ்லோ, இத்தாலி - பிரேசிலைச் சேர்ந்த கட்டுமானத்துறை நிபுணரான லினா போ பரடி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த நாட்டிய கலைஞரும், நடன ஆசிரியருமான ருக்மணி தேவியும் இடம்பெற்றுள்ளார்.
English summary:
NEW DELHI: International Women's Day is celebrated today. To mark this, a record of the various departments has issued a Google Doodle in honor of women.