Wednesday 22 March 2017
ஆர்.கே.நகரில் புதிய சங்கங்கள்: எடுபடுமா தினகரனின் ஐடியா
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் லெட்டர் பேடு இயக்கமாக இருந்தாலும் கூட்டிகிட்டு வாங்க. அவங்களை எனக்கு ஆதரவு கொடுப்பது போல, அறிக்கை மட்டும் விடச் சொல்லுங்க. அவங்களுக்கு தேவையானதை கொடுத்துடலாம் என்று, கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் அ.தி.மு.க.,வின் நியமன துனைப் பொதுச் செயலர் தினகரன்.
முளைக்கும் சங்கங்கள்:
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் லெட்டர் பேடு சங்க நிர்வாகிகளைத் தேடி, கட்சியின் முக்கியத் தலைவர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனராம். பத்து ஓட்டு இருந்தால் கூட போதும். லெட்டர் பேடு சங்கமாக இருந்தாலும் பரவாயில்லை. தினகரனை ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரிக்கிறோம் என்று மட்டும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று, சொல்லி, சங்கங்களை வளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அ.தி.மு.க., மூத்த தலைவர்களின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சிலர், சமூக அமைப்புகள் பெயரில், திடீர் லெட்டர் பேடு அச்சடிக்கத் துவங்கி உள்ளனர். அவர்களெல்லாம் விரைவில் தினகரனை சந்தித்து, ஆதரவளிக்கக்கூடுமாம். இப்படி நூற்றுக்கணக்கான சங்கங்களும், பொது நல அமைப்புகளும் தனக்கு ஆதரவளிப்பது போல, செய்திகள் வர வர, அது தொகுதிக்குள் தன்னுடைய இமேஜை உயர்த்தும் என்றும், எதிர்ப்பாக இருப்போரின் மன நிலையை மாற்றும் என்றும் தினகரன் கணக்குப் போட்டே, இப்படி செய்கிறார் என்பது மக்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்? இந்த தேர்தல் நேரத்து ஸ்டண்டெல்லாம் எடுபடப் போவதில்லை என, தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

ஓ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு கேட்டு மனு
புதுடில்லி: ஓ.பி.எஸ்., அணியினர் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர்.
இதன்பின்னர் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறுகையில், ஓ.பி.எஸ்.,க்கு தொடர்ந்து மிரட்டல் அதிகரித்து வருகிறது. ஓ.பி.எஸ்., மதுசூதனனுக்கு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு கேட்டு மனு அளித்தோம். உளவுத்துறை மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் கூறினார். ஓ.பி.எஸ்., கையை வெட்டுவென் என ஒருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

கின்னசில் ராகுல் பெயர்? மாணவர் ஆசை
புதுடில்லி: ராகுல் பிரசாரத்தால் காங்கிரஸ் 27 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இதனால், அவரது பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விகாஸ் திவான். இவர், கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் தீவிர பிரசாரம் மற்றும் மீடியா பேட்டி காரணமாக அக்கட்சி 27 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால், ராகுல் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் எனக்கூறி, விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பிக்க தேவையான கட்டணத்தையும் விகாஸ் திவான் செலுத்தியுள்ளார்.
விகாஸ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கின்னஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா எனக்கூற மறுத்துவிட்டது

ஜார்ஜ்-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் உத்தரவாதத்தை நிறைவேற்றாதது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய முடியும். 22ம் தேதி ஜார்ஜ் ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தீர்கள். நேரில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் மேல்முறையீடு செய்வது ஏன்? ஒரு அதிகாரி நேரில் ஆஜராக அளித்த உத்தரவுக்கு மற்ற அதிகாரிகள் ஆஜராவது ஏன்? ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஆஜராவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். உறுதிமொழியை மீறியதால் ஜார்ஜ் மீது ஏன் சூமோட்டோ (தாமாக முன்வ வந்து) வழக்கு தொடரக்கூடாது எனக்கூறினார்.

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு: மதுசூதனன் கோரிக்கை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெறாவிட்டால் தங்களை கொலை செய்துவிடுவதாக, டி.டி.வி.தினகரன் பெயரை சொல்லி மர்ம நபர்கள் நேரடியாக மிரட்டுவதாக. அதிமுக ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.