புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விளக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் கடந்த வருடம் 2016 நவம்பர் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இதற்கான கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஒத்திவைப்பு:
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டு மாற்ற முடியாதவர்களுக்கு தனி சலுகை வழங்காதது ஏன்? ஏற்கனவே அறிவித்தபடி, மார்ச் 31 ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்? மார்ச் 31 வரையிலான கால அவகாசத்தை குறைத்தது ஏன்? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இங்குள்ளவர்களுக்கு ஏன் வாய்ப்பு தரப்பவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.