சென்னை: தற்போது வெற்றி பெறும் கங்கையால், தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும் என பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ., தலைவர் தமிழிசையுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது தமிழிசை கூறியதாவது:
தொகுதியில் பணப்பட்டுவாடா :
தற்போது வெற்றி பெறும் கங்கையால் தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும். தி.மு.க., வெற்றி பெற்றால் வெளிநடப்பு செய்வார்கள். அதிமுக வெற்றி பெற்றால், மேஜையை தட்டுவார்கள். தாமரை வளர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். தொகுதியில் பணப்பட்டுவாடா உள்ளது . ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் இறக்கப்பட்டுள்ளனர். எல்லா சூழ்ச்சிகளையும் மீறி பா.ஜ., வெற்றி பெறும். தேசிய கட்சி கவனத்தில் தமிழகம் இருக்கும், இந்த தேர்தலில் மோடியின் ஆக்கம் தாக்கம் இருக்கும் . மக்கள் மாற்றத்தை கொடுக்க வேண்டும்.
பிரதமரின் தொகுதியாக மாறும் :
4 மாநில மக்கள் மாற்றம் கொடுத்தனர், ஏன் அந்த மாற்றம் தமிழகத்தில் இருக்கக்கூடாது. மோடியின் தாக்கம் ஆக்கம் தமிழகத்தில் பிரதிபலிக்கும். பா.ஜ., வெற்றி பெற்றால், தொகுதி மோடியின் நேரடி பார்வைக்கு சென்றுவிடும். இதன் மூலம் எந்தளவிற்கு பலன்பெறும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் தொகுதியாக இருந்தது பிரதமரின் தொகுதியாக மாறும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.