Friday 24 March 2017
வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்'
புதுடில்லி : வளைகுடா நாடுகளில் மட்டும், தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் பெண்கள் வேலை செய்வதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.61,843 கோடியை தமிழகத்திற்கு அனுப்புகின்றனர்.
முதல் ஆய்வு:
முதல்முறையாக வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டு, புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருதய ராஜன், பெர்னால்ட் டிசோசாசாமி, சாமுவேல் அசிர் ராஜ் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20,000 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் :
2015 ம் ஆண்டு கணக்கீட்டின்படி, 22 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்களில் 75 % பேர் இந்துக்கள், 15 % பேர் இஸ்லாமியர்கள், 10% பேர் கிறிஸ்தவர்கள். மொத்த தமிழர்களில் 15% பெண்கள். தமிழகத்தில் உள்ள 5ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக உள்ளார்.
அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4.1 லட்சம் தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். யுஏஇ, சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 11 லட்சம் தமிழர்கள் பணிபுரிகிறார்கள். சுமார் 85 சதவீத தமழர்கள் தென்கிழக்கு ஆசியா மற்றம் மேற்கு ஆசியாவில் வசிக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த 86 சதவீதம் பேர் வளைகுடா நாடுகளில் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களின் தாய் - தந்தை இருவருடனும் சேர்ந்து இருப்பதில்லை. 10 லட்சம் தமிழக திருமணமான பெண்கள், கணவன், குழந்தைகளை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் 50 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவிய போதிலும், தமிழர்கள் கடுமையாக உழைத்து 70 % க்கும் அதிகமாக பணம் அனுப்புகிறார்கள். கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் செல்கின்றனர். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜன்டுகளின் உதவியினாலேயே செல்கிறார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்யும் 52% தமிழர்களின் வயது 20 முதல் 34. வெளிநாடுகளில் வேலை செய்யும் 15% பெண்களில் திருப்பூர்(43.9%), நாமக்கல்(40.9%) ஆகிய தொழில்துறை மாவட்டங்களில் இருந்தே செல்கின்றனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர்(1.8%), ராமநாதபுரம்(2%), அரியலூர்(2%) மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள்.
கர்நாடகாவில் அதிகம்:
உள்நாட்டில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்ளுக்கு இடம்பெயர்ந்தவர்களை பொருத்தவரை, கர்நாடகாவிலேயே அதிகமாக தமிழகர்கள் வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 3.22 லட்சம் பேர் சென்னையில் இருந்து செல்கின்றனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வேலைக்கு செல்கின்றனர்.

அதிமுக தலைமையேற்பேன்; தீபா
சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.பின்னர் தீபா கூறியதாவது: ஆர். கே நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மக்களின் அன்பே காரணம். மக்கள் நல்ல முடிவை அளிப்பார்கள். உண்மையான வாரிசு யார் என்பதையும் தெரிவிப்பார்கள். ஆர்.கே. நகருக்கு நிச்சயம் நல்ல தலைமை தேவைப்படுகிறது.
நிறைவேற்றுவேன்:
தேர்தல் முடிவுக்கு பின்னால் அதிமுக தலைமையேற்று அம்மா வழியில் கட்சியை கொண்டு செல்வேன் என நம்பிக்கையுள்ளது. 3 மாதமாக மக்கள் என்னை சந்தித்து வருகின்றனர் . முதலில் சந்தித்தவர்கள் ஆர்கே நகரை சேர்ந்தவர்கள். ஜெ., என்ன வாக்குறுதி அளித்தார்களோ அதனை நிறைவற்றுவேன். மக்கள் வாய்ப்பு அளித்த பின்னர் நிச்சயம் நிறைவேற்றுவேன். தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில் போட்டியிடுவேன். உரியநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் தினகரன் திட்டமிட்டு வந்துள்ளார் எனது மாற்று வேட்பாளராக எனது உண்மையான தொண்டர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏர் இந்திய ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,
மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி., ஊழியரை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் ரவிந்திர கெயிக்வாட். இவர், இன்று புனேயிலிருந்து டில்லி செல்லும் விமானத்தில் சென்றார். அப்போது இருக்கை பிரச்னை காரணமாக ஏர் இந்தியா ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஊழியரை செருப்பால் அடித்ததாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆணவம்:
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கெய்க்வாட், ஊழியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதால் செருப்பால் அடித்தேன். 25 முறை அடித்தேன். நான், சிவசேனா எம்.பி., பா.ஜ.,வை சேர்ந்தவன் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
அவமானப்படுத்தினார்:
அடி வாங்கிய சுகுமார் என்ற ஊழியர் கூறியதாவது: என்னை செருப்பால் அடித்த எம்.பி., மோசமான வார்த்தைகளால் திட்டினார். எனது கண்ணாடியை உடைத்ததுடன், அனைத்து ஊழியர்கள் முன்னிலையிலும் அவமானப்படுத்தினார். எம்.பி.,க்களின் இந்த கலாசாரம், நடவடிக்கைகளில் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் அசோக் கஜபதி கூறுகையில், இது போன்ற சம்பவங்களை எந்த கட்சியும் ஆதரிக்கக்கூடாது. இது போல் சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
வக்காலத்து:
சிவசேனா எம்.பி., மணிஷ் கயன்டே கூறுகையில், சம்பவத்தை கெயிக்வாட் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், இது போன்ற நடவடிக்கைக்கு சிவசேனா எப்போதும் ஆதரவு தராது. கெயிக்வாட் புகழ்பெற்ற எம்.பி., அவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம்: ஸ்டாலின்
சென்னை: இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுக உட்கட்சி பிரச்னை. இதில் தி.முக., தலையிடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபை வளாகத்தில் அவர் கூறியதாவது: சட்டசபையில் எந்த விதிகளும் கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். இதன் முடிவு தெரிந்து தான் தீர்மானம் கொண்டு வந்தோம். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கு திமுக காரணமல்ல. இரட்டை இலை முடக்கப்பட்டது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. இதில், தி.மு.க., தலையிடாது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க.,விற்கு சாதகம் என தவறான தகவல் பரவுகிறது. அனைவரின் நம்பிக்கையை பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.