சண்டிகர்: எனது குடும்பத்தை நடத்துவதற்காக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி வருவதாக பஞ்சாப் அமைச்சர் சித்து கூறியுள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து, தனியார் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார். பஞ்சாபில் அமைச்சராக பதவியேற்ற பின்னரும் அந்த நிகழ்ச்சியில் சித்து கலந்து கொண்டார்.. இது குறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டார்.இது குறித்து விளக்கமளித்த சித்து கூறியதாவது: அம்ரீந்தர் செய்வது எப்போதும் சரியாக இருக்கும். எனது குடும்பத்தை நடத்துவதற்காகவும், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் டிவி நிகழ்ச்சியில் தோன்றி வருகிறேன் என்றார்
Friday 24 March 2017
சேகர் ரெட்டியிடம் 5 நாள் விசாரணை: அமலாக்கத்துறை மனு
சென்னை: சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம் குமார் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறையினர், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஜாமினில் வெளிவந்த 3வது நாள் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடி ஒதுக்கீடு
புதுடில்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார்.தமிழகத்தில் கடுமயைான வறட்சி நிலவுகிறது. இதற்காக ரூ.39,565 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
வேளாண் தொழில்நுட்பத்திற்கு நெல்லை பல்கலை அனுப்புகிறது சாட்டிலைட்
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை அறிய 7.67 கோடி ரூபாய் செலவில் விண்ணில் சாட்டிலைட் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கட்டுமானங்கள் குறித்து துணைவேந்தர் கி.பாஸ்கர் கூறியதாவது:நெல்லை பல்கலையில் தற்போது சுற்றுச்சுவர் இல்லை. 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். பல்கலை வளாகத்தில் செயல்படும் "ஞானவாணி' மாணவர் வானொலிக்கு ரூ 75 லட்சம் செலவில் புதிய ஒலிபரப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. மேலும்3 ஆயிரம் மாணவர் அமரும் வகையில் 14 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு அரங்கம் கட்ட உள்ளோம்.
பல்கலையில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சூரிய சக்தியை கொண்டு சோலார் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 13.50 கோடி ரூபாய் செலவில் துவக்க உள்ளோம். இதன் மூலம் 3 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதில் பல்கலையின் தேவையான ஒரு மெகாவாட்டை தவிர மீதத்தை மின்வாரியத்திற்கு விற்பனை செய்வோம். பல்கலை வளாகத்தில் 200 கோடி ரூபாய் செலவில் மையப்படுத்தப்பட்ட கருவி மயமாக்கல் வசதியும், 100 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு கிராமமும் ஏற்படுத்த உள்ளோம். நெல்லை பல்கலை மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் நோக்கில் 7.67 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து மனோசாட் என்ற ஒரு சேட்டிலைட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதன் மூலம் தமிழக விவசசாயிகள் பயன்படும் வகையில் வேளாண்துறையில் நோய்த்தடுப்பு முறைகள், புதிய நுட்பங்கள், காலமுறைக்கு ஏற்பட்ட விவசாயம் போன்றவற்றை கண்டறிவோம் என்றார். பேட்டியின் போது பல்கலை பதிவாளர் ஜான் டி பிரிட்டோ உடன் இருந்தார்.

அலுவலகத்தை சுத்தம் செய்த உ.பி., அமைச்சர்
லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவை தொடர்ந்து, இளம் அமைச்சர் ஒருவர், அலுவலகத்தை சுத்தப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உ.பி., முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இதற்காக வருடத்தில் 100 மணி நேரம் செலவிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை ஏற்று, அமைச்சராக உள்ள உபேந்திர திவாரி என்பவர், சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தையும், நடைபாதைகளையும் துடைப்பத்தால் சுத்தப்படுத்தினார். இதனை பார்த்த அதிகாரி எதையும் செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஆர்.கே. நகரில் 127 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர். கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச்23) பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. தேர்தலில் போட்டியிட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் :
தி.மு.க.,வின் மருதகணேஷ், ஓ.பி.எஸ்., அணி சார்பில் மதுசூதனன், சசி அணியின் தினகரன், பா.ஜ.,வின் கங்கை அமரன், தே.மு.தி.க., வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர். லோகநாதன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள். வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீண் நாயர் மனுக்களை பெற்று கொண்டார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை(மார்ச் 24)ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஏப்ரல் 17 ம் தேதி எண்ணப்படும்.

கவனமில்லாத காங்., மேலிடம்: கிருஷ்ணா
பெங்களூரு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அடிமட்டத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், தலைமை இதில் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசில், கட்சி தலைமைக்கும் அடி மட்ட தொண்டருக்கு தொடர்பில்லாமல் உள்ளது. கட்சியில் மரியாதையும், என்னிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என மட்டுமே எதிர்பார்த்தேன். எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஊழலுக்கு எதிராக மோடி பொறுமை காட்டவில்லை. இது என்னை கவர்ந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்னை கவர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.