Monday 27 March 2017
மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.,
சென்னை: ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. இதனால் உறுதியான வெற்றி பெறுவார். எங்களது சின்னம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
போராடுவோம்:
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பேட்டி:அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்க போராடுவோம். இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க எல்லா முயற்சியையும் எடுப்போம். தேர்தலில் ஜெயலலிதாவின் சாதனைகளை முன்னிறுத்துவோம். மதுசூதனன், இங்கு வளர்ச்சி நாயகனாக செயல்பட்டதை எடுத்து சொல்வோம். ஜெ., வீட்டை நினைவு இல்லமாக்க தேவையான முயற்சிகள் செய்வோம். நாளை முதல் ஓ.பி.எஸ்., பிரசாரம் மேற்கொள்கிறார். தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். நாளை( மார்ச் 27) காலை முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday 24 March 2017
வீதி வீதியாக சென்று கமிஷனர் வரி வசூல்
திருச்சி : மணப்பாறை நகராட்சி பெண் கமிஷனர், வீடு வீடாக சென்று வரி வசூலித்து வருகிறார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருப்பவர், பாப்பம்மாள். நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், ஒரு மாதமாக, நிலுவை வரிகளை கட்டும்படி, மணப்பாறை நகரம் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது.
அப்படியிருந்தும், சொத்து வரியில், 46 லட்சம் ரூபாய், தண்ணீர் வரியில், 57.60 லட்சம் ரூபாய் நிலுவை உள்ளது. தண்ணீர் வரியில் மொத்த தொகை, 1.05 கோடி ரூபாயில், 50 சதவீதத்துக்கும் மேல் பாக்கியுள்ளது, நகராட்சி வருவாயை பாதிக்கும் விஷயமாக உள்ளது.
இதையடுத்து, மாருதி ஆம்னி காரில், கமிஷனர் பாப்பம்மாள், நகராட்சி ஊழியர்களுடன் வீதி வீதியாக சென்று, நிலுவை வரிகளை வசூலித்து வருகிறார்.
பாப்பம்மாள் கூறியதாவது:குடிநீர் வரி கட்டுவதில், மக்கள் சுணக்கமாக உள்ளனர். அதனால், நானே நேரில் வசூலித்து வருகிறேன். குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவோமோ என்ற பயத்தில், வரியை கட்டுகின்றனர். இப்படியாவது, முழுத் தொகையையும் வசூலித்து விடலாம் என்ற ஆவலில் தான், வீதி வீதியாக சென்று வருகிறேன்.
வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க உள்ளோம். சொத்து வரி கட்டாதவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாப்பம்மாள், போலியோவால் கால் பாதிக்கப்பட்டு, மற்றவர் துணையின்றி நடக்க முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை; நிறுவனங்கள் தாராளமாக வழங்க அனுமதி
புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைக்கான வரம்பை ரத்து செய்யும், சட்டத்திருத்த நிதி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
சட்ட திருத்தம்:
தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஈட்டிய, சராசரி நிகர லாபத்தில், 7.5 சதவீதம் வரை, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த வரம்பு, புதிய சட்டத்திருத்த மசோதாவில் நீக்கப்பட்டு உள்ளது. இனி, கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்கலாம். எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரத்தை, நிறுவனங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளவும், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
வரம்பு தளர்வு:
அதே சமயம்,
ஒரு நிதியாண்டில், எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதை, நிறுவனங்கள், அவற்றின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். நன்கொடைக்கான வரம்பு தளர்த்தப்பட்டு உள்ளதால், அரசியல் கட்சிகளிடம், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் புழங்குவது குறையும். நிறுவனங்கள், வெளிப்படையாக நன்கொடை விபரங்களை தெரிவிக்க முடியும். அரசியல் கட்சிகளுக்கு, கணக்கில் காட்டாத பணம் செல்வதை தடுக்கவே, நன்கொடைக்கான வரம்பை, அரசு தளர்த்தி உள்ளது.
தற்போது, அரசியல் கட்சிகள், ரொக்கத்தில் நன்கொடை பெறுவதற்கான வரம்பு, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது; வரம்பிற்கு மேற்பட்ட தொகையை பெற்றால், நன்கொடை அளித்தவரின் விபரங்களை, அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

'இரட்டை இலை கிடைக்காதது வருத்தம்!': பன்னீர்
சென்னை:'இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதாவின் வெற்றி சின்னமான, இரட்டை இலையை, தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வலுவான ஆதாரங்களை, தேர்தல் கமிஷனிடம் முன்வைத்தும், இரட்டை இலை சின்னம், எங்களுக்கு கிடைக்காமல் போனது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை, சட்டப்படி எப்பாடுபட்டாவது, மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகியோர் நல்லாசியுடன், கட்சியையும், ஆட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், தமிழ் மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
சென்னை,: பிரபல எழுத்தாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கியவருமான அசோக மித்திரன் , 85, காலமானார்.
இவர் 1931 செப்., 22ம் தேதி தெலுங்கானாவின் செகந்திராபத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் தியாகராஜன். தந்தையின் மறைவுக்குப் பின் 1952ல் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போதே எழுதத் தொடங்கினார். இருப்பினும் 1966ல் தான் முழுமையான எழுத்தாளராக 'அசோகமித்திரன்' என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். 1980களில் பல்வேறு கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதையே முழுமையான பணியாக இந்தியா முழுவதும் மேற்கொண்டார்.
1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். 'அசோகமித்திரன்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். சிறுகதைகள், நாவல் கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதினார். சில பத்திரிகைகளிலும் எழுதினார். இவரது கதை எழுதும் பாணி தனித்துவம் வாய்ந்தது. உணர்ச்சி வசப்பட்ட நடையைத் தவிர்த்து சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதும் வழக்கம் கொண்டவர். இதனால் வாசகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு இருந்தது. 1996ல் 'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது செகந்திராபாத்தை கதைக்களமாக கொண்டிருக்கும்.
200 சிறுகதைகள்:
'கணையாழி' என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தவிர 8 நாவல்கள், நுாற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என எழுத்துலகில் தனி முத்திரை படைத்தவர்.
போர்டீன் இயர்ஸ் வித் பாஸ்', 'தி கோஸ்ட் ஆப் மீனம்பாக்கம்', 'ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்' உள்ளிட்ட இவரது ஆங்கில நுால்கள் மிகவும் பிரபலம். ஆங்கில நாளிதழ்களிலும் எழுதியுள்ளார். 'நாடகத்தின் முடிவு', 'வாழ்விலே ஒரு முறை', 'காலமும் ஐந்து குழந்தைகளும்', 'பிரயாணம்', 'தண்ணீர்', 'இன்று', 'மானசரோவர்', 'ஒற்றன்', 'ஆகாசத் தாமரை', 'விடுதலை' உள்ளிட்டவை இவரது படைப்புகளில் முக்கியமானவை.
விருதுகள்:
1977 மற்றும் 1984ல் தமிழக அரசின் 'இலக்கிய சிந்தனை' விருது, 1992ல் 'லில்லி நினைவு' பரிசு, 1996ல் அக்சரா விருது, 1996ல் சாகித்ய அகாடமி விருது, 2007ல் எம்.ஜி.ஆர்., விருது, 2012ல் என்.டி.ஆர் தேசிய நுாலக விருது, 2013ல் 'க.நா.சு' விருது, 2013ல் பாரதிய பாஷா பரிசத் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர்.
கமல் இரங்கல்:
அசோகமித்திரன் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். டுவீட்டரில் , கூறியதாவது, எழுத்தாளர் அசோகமித்திரன் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும் என தெரிவித்துள்ளார்.

மதுசூதனன், சொத்து விபரம் எவ்வளவு
சென்னை : மதுசூதனன் தனக்கு ரூ.5.37 கோடி அளவிற்கு சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்கே.நகரில் பன்னீர் அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன் தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி மதுசூதனன் தனக்கு அசையும் சொத்துமதிப்பாக 70.62 லட்சம் ரூபாயும், அசையா சொத்து மதிப்பாக 4.67 கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.