புதுடில்லி : டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று கலந்து கொண்டார். இதனையடுத்து இன்று காலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அவரது வீட்டிற்கு சென்று வைகோ சந்தித்துள்ளார். அப்போது, 13 வது நாளாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். தமிழக வறட்சி நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைகோ வலியுறுத்தி உள்ளார்.
Tuesday 28 March 2017
பஞ்சாப்பிற்குள் ஊடுருவ முயற்சி : ஒருவர் சுட்டுக்கொலை
சண்டிகர் : பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஊடுருவல் முயற்சி :
பஞ்சாப்பின் குர்ட்சாபூர் எல்லையில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவர் எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக பஞ்சாப் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்ரமணியன் சாமி
பாட்னா: ‛நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை உடையவர்' என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை கொண்டவராக இருந்தார். காங்., தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ராமாயணம் தொடரை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ராஜீவ் அனுமதி அளித்தார். இந்துக்களின் எழுச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் தெ
ரிவித்தார்.

‛டைம்' பட்டியலில் மீண்டும் மோடி?
புதுடில்லி: அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர் பட்டியலில் மீண்டும் பிரதமர் மோடி இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க பத்திரிகையான ‛டைம்', ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்த 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் மோடி இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டைம் வெளியிட்டுள்ள இணையதள ஓட்டெடுப்பில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பின், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்யநாதெள்ளா மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

சுழல் இருக்கை ரயில் பெட்டிகள், நவீனத்தில் அசத்தும் ஐ.சி.எப்.,
ஆந்திரா, காஷ்மீர் மாநிலங்களில் உள்ள சுற்றுலா பகுதிகளில் இயக்க, சுழலும் இருக்கைகளுடன், நவீன ரயில் பெட்டிகளை, ஐ.சி.எப்., தயாரித்து வருகிறது.
தமிழகத்தில், ஊட்டியில் இயக்கப்படும் மலை ரயிலை போல, ஆந்திர மாநிலம், அரக்வேலியில், சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதை, ஐ.ஆர்.சி.டி.சி., என்ற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம் இயக்கி வருகிறது.
ரயிலுக்காகவும், காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலங்களில் இயக்கவும், சுழலும் இருக்கைகள், கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய, நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க, சென்னை, ஐ.சி.எப்.,க்கு, ஆர்டர் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரயில் பெட்டிகள் தயாரிப்பில், உடனுக்குடன் தேவைக்கு ஏற்ப, நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. இதனால், நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க, ஆர்டர்கள் தொடர்ந்து கிடைக்கிறது' என்றார்.
என்ன சிறப்பு?
நாட்டிலேயே முதல் முறையாக, மேற்கூரை முழுவதும் பிரத்யேக கண்ணாடி கூரையுடன் இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது. அது, வெளிப்புற சூழலுக்கு ஏற்ப, பகல், இரவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதில், சுழலும் இருக்கைகள் பொருத்தப் படுவதால், இயற்கை காட்சிகளை, 360 டிகிரியில் சுழன்றபடி, பார்த்து ரசிக்கலாம். ரயில் முழுவதும் குளிசாதன வசதி செய்யப்படும்.

ஆர்.கே.நகரில் பண நடமாட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகள்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் கடும் சூடாகி இருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் ஆகியோர், தீவிர பிரசாரத்தில் இருக்கின்றனர்.
ஆனால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில், தொகுதியில் மற்றவர்களைக் காட்டிலும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார் அ.தி.மு.க., அம்மா கட்சி வேட்பாளர், டி.டி.வி.தினகரன். அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கூட தீவிரமாக தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கேள்விக்குறி:
இருந்தும், தினகரனுக்கு வெற்றி கேள்விக்குறியாக இருப்பதால், ரொம்பவும் அச்சப்படுகிறார். அதனால், மொத்தமுள்ள 33 அமைச்சர்களையும் தொகுதிக்கு அனுப்பி தேர்தல் வேலை பார்த்து வருகிறார். இதனால், அங்கே பணம் தண்ணீராக செலவழிக்கப்படுகிறது. மக்களுக்கு கேட்டதெல்லாம் செய்து கொடுக்கும் நிலைக்கு நாம் வந்து விட்டால், மக்கள் நமக்குத்தான் ஓட்டளிப்பர் என, தினகரன் தரப்பு முடிவெடுத்து, அதற்கான காரியங்களில் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகிறது.
பண விளையாட்டு:
ஆனால், இந்த விஷயம், தேர்தல் பார்வையாளருக்கு கட்டாயம் தெரிந்திருக்கிறது. அதனால், பண விளையாட்டு மூலம் ஜனநாயகத்தை முடக்கப் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், தேர்தல் பார்வையாளர்கள் மூலம், அறிக்கை பெற்று, ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க விடமாட்டோம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
புகார்:
இந்நிலையில், தேர்தல் கமிஷன் நடத்தை விதிகள் உட்பட, பல்வேறு விஷயங்களை தி.மு.க., தரப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், ஆர்.கே.நகரில் பணநடமாட்டம் அதிகமாக உள்ளது என்று புகார் கொடுக்க உள்ளனர். மற்ற கட்சிகளும், இதே கருத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனில் புகார் கொடுப்பர்.
தேர்தல் நிறுத்தம்?
அதை வைத்து, தேர்தல் நெருக்கத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் நிறுத்தும் யோசனையில் உள்ளது. இதற்கு, சமீபத்திய உதாரணங்களாக, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தல்கள் இருப்பதால், அதே பாணியில், ஆர்.கே.நகர் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்பட கூடுதல் வாய்ப்புள்ளது.
பின்னடைவு:
இதையறிந்துள்ள அ.தி.மு.க., அம்மா தரப்பினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டும் என தங்களுக்குள் கூறிக் கொண்டு, தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்திலும், சட்ட விரோதமாகவும் ஈடுபடுவது, தற்போதைய அரசைப் பாதிக்கிறது; அரசின் செயல்பாடுகளும் கடும் பாதிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என, வருவாய்த் துறை கீழ் நிலை அதிகாரமட்டங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இத்தகைய செயல்பாடுகள், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.