அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்துக்கு, கட்சியின் சசிகலா அணியும், பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து மோதின. இதனால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கமிஷன், ஆர்.கே.நகர் தேர்தலுக்காக மட்டும், இரட்டை இலையைத் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.
வரும் ஏப்., 17ம் தேதிக்குள், இரு தரப்பும் கூடுதல் விவரங்கள் ஏதும் அளிக்க விரும்பினால், தேர்தல் கமிஷனிடம் அளிக்கலாம். அதன்பின், இதன் மீது மீண்டும் விசாரணை நடத்தி, இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவித்தது. கூடவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க., என்னும் கட்சிப் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தது.
புதிய சின்னம்:
இதனால், சசிகலா அணி, அ.தி.மு.க., அம்மா என பெயர் சூட்டிக் கொண்டதோடு, தொப்பி சின்னத்தையும் கேட்டுப் பெற்றது. அதேபோல, அ.தி.மு.க., புரட்சித்தலைவி அம்மா என பன்னீர்செல்வம் அணி, கட்சிக்கு பெயர் சூட்டிக் கொண்டதோடு, இரட்டை மின் விளக்கு சின்னத்தைக் கோரிப் பெற்றது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்று, டில்லி வழக்கறிஞர்கள், சல்மான் குர்ஷித் மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் சொன்னதை நம்பி, நம்பிக்கையுடன் காத்திருந்த சசிகலா தரப்பு, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதும் கடும் அப்செட் ஆகி உள்ளது.
மோடி தான் காரணம்:
இதையடுத்து, இப்படி இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு காரணம், பா.ஜ.,வும்; மோடியும்தான் என்று சொல்லி கூவத் துவங்கி உள்ளனர். இந்த பிரச்னையை துவக்கத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருப்பவர் அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு செயலராக இருக்கும் அன்வர் ராஜா எம்.பி., ஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டதில் இருந்தே, அ.தி.மு.க., விஷயத்தில், பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் மூக்கை நுழைத்து வருகிறது என்று சொல்லி வருகிறார்.
அன்வர் ராஜாவிற்கு அவசர அழைப்பு:
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதும், டில்லியில் இருந்த அன்வர் ராஜாவை, அவசர அவசரமாக தமிழகம் வரவழைத்த, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், ஆர்.கே.நகர் தொகுதி சசிகலா அணி வேட்பாளருமான டி.டி.வி.தினகரன், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கான காரணம், பிரதமர் மோடியும், பா.ஜ.,வும்தான் என்று பேசுங்கள். தேவையானால், ஜெயா டி.வி.,யை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ஏற்கனவே பா.ஜ.,வையும், மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும், அன்வர் ராஜா, இப்படி தலைமையே கேட்டுக் கொண்டதும், உற்சாகமாகி விட்டார்.