http://dlvr.it/RbGkT8
Thursday, 9 July 2020
காஷ்மீர் : `சைலன்சர் துப்பாக்கி; பாதுகாப்பு தோல்வி’ - குடும்பத்துடன் கொல்லப்பட்ட பா.ஜ.க தலைவர்
http://dlvr.it/RbGkT8
ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து அரசியலாக்கப்படுகிறது: அமெரிக்கா கவலை
வாஷிங்டன்: ''இந்தியாவில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து, அமெரிக்காவில் அரசியலாக்கப்பட்டு, தடை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது,'' என, அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மலேரியா தடுப்பு மருந்தான, ஹைட்ராக்சிக்ளோரோக்வின், 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இதை, இந்தியா கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால், இந்த மருந்தை, அமெரிக்காவில் சில ஊடகங்களும், மருத்துவத் துறையில் சில பிரிவினரும் அரசியலாக்கி விட்டனர். இந்த மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படும் என, தேவையற்ற பீதியை கிளப்பி, டிரம்புக்கு எதிரான போராக மாற்றிவிட்டனர்.
இது ஆபத்தான மருந்து என்பது அபத்தமான வாதம். கொரோனா நோயாளிகளின், முதல் ஏழு நாட்கள் மிக முக்கியம். அப்போது, இந்த மருந்தை வழங்கினால், நுரையீரல் செல்களில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம். இந்த மருந்தை பயன்படுத்திய நோயாளிகளில், 50 சதவீதத்தினரின் இறப்பு தடுக்கப்பட்டுள்ளதை, ஜே.ஐ.டி., மருத்துவ இதழின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், டெட்ராய்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அவசர சிகிச்சைக்கு, ஹைட் ராக்சிக்ளோரோக்வின் மருந்தை பயன்படுத்த அனுமதி கோரி உள்ளனர். இந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைவது நிரூபணமானால், இந்த மருந்தின் பயன் குறித்து, அதிபர் டிரம்ப் கூறியது உண்மை என்பது தெரியவரும். அத்துடன், இந்த மருந்தை பயன்படுத்த தவறியதால், ஆயிரக்கணக்கானோரை பறி கொடுத்த தவறும் புரிய வரும். இவ்வாறு, அவர் பேசினார்.
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
வாஷிங்டன்: திபெத் செல்வதற்கு, அமெரிக்கர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சீன அதிகாரிகள் உள்ளிட்டோர், அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடு விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தன்னாட்சி பகுதியாக, இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள திபெத் விளங்குகிறது. இதற்கு முழு தன்னாட்சிக்கு கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கைத் தொடர்ந்து, திபெத்தையும், தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், திபெத்துக்குள் நுழைய, அமெரிக்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுலா பயணியருக்கு சீனா, தடை விதித்துள்ளது.
ஏற்கனவே, 'கொரோனா' வைரஸ் பரவல், ஹாங்காங்கில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே, கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது சீனா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்கா பதிலடி கொடுத்து உள்ளது. இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் போம்பியோ கூறியுள்ளதாவது:
திபெத்துக்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கும் சீன அதிகாரிகள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் வகையில், 2018 டிசம்பரில், அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த சட்டத்தின்படி, திபெத்துக்குள் அமெரிக்கர்கள் நுழைவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் தொடர்புடைய சீன அதிகாரிகள், அமெரிக்கா நுழைவதற்கு விசா கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. திபெத்துக்கு, உண்மையான, நியாயமான தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது.
அனுமதி
திபெத்துக்குள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டியது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்று. மனித உரிமை மீறல், சுற்றுச்சூழலை பாதுகாக்கத் தவறியது என, சீனா தொடர்ந்து குற்றங்களை செய்து வருகிறது. அதனால், திபெத்துக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
நியூயார்க்; ஐ.நா.,வின், 75வது ஆண்டு விழாவுக்காக இறுதி செய்யப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா, கடந்த மாதம் தேர்வாகியுள்ளது. இதன்படி, வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா உறுப்பினராக இருக்கும்.
இந்நிலையில், ஐ.நா.,வின், 75வது ஆண்டு விழா, செப்டம்பர், 21ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வரைவு அறிக்கை, தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த வரைவு அறிக்கை, சர்வதேச பிரச்னைகள் குறித்து, இந்தியாவுக்கு உள்ள கவலைகள் மற்றும், அவற்றிற்கான தீர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், அமைந்துள்ளதாக, ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, ஐ.நா.,விற்கான இந்தியாவின் நிரந்தர துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:ஐ.நா., சபையின், 75வது ஆண்டு விழாவிற்காக இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். 2021 முதல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வரவுள்ள முன்னுரிமைகள் அனைத்தும், இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆசை காட்டி மோசம் செய்த ஐ.டி.,நிறுவனங்கள் :பிழைப்புக்கு வழியின்றி தவிக்கும் இளைஞர்கள்
சென்னை :கூடுதல் சம்பள ஆசை காட்டி, நேர்முக தேர்வு நடத்தி, வேலைக்கு தேர்வு செய்த சில ஐ.டி., நிறுவனங்கள், தற்போது வழங்கிய பணி ஆணையை ரத்து செய்ததால், பார்த்த வேலையை தொலைத்து விட்டு, அப்பாவி இளைஞர்கள் நிர்கதியாக நிற்கின்றனர்.
நன்கு படித்த இளைஞர்களுக்கு, எளிதாக வேலை கிடைக்கும் இடமாக, ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில், சென்னை, ஓ.எம்.ஆரில், தரமணி முதல் சிறுசேரி வரை, நுாற்றுக்கணக்கான, ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ஊதியம்
கொரோனா ஊரடங்கால், ஐ.டி., நிறுவனங்கள் பணி வெகுவாக பாதித்துள்ளது. பல நிறுவனங்கள், வீட்டில் இருந்து பணி செய்ய, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளன. போதிய பணி இல்லாததால், சில நிறுவனங்களில், ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, பல ஐ.டி., நிறுவனங்கள், ஊரடங்கு அறிவிப்புக்கு முன், கூடுதல் சம்பள ஆசை காட்டி, நன்கு அனுபவம் வாய்ந்த ஆட்களை, நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுத்தது.அதேபோல், கல்லுாரி கள் வழியாகவும், புதிதாக இளைஞர்களை தேர்வு செய்தது. பணி அனுபவத்தை பொறுத்து, ஊதியம் நிர்ணயம் செய்து, அவர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது.
அறிக்கை
இதை நம்பி, ஏற்கனவே பார்த்த வேலையை விட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புதிய நிறுவனங்களுக்கு செல்ல காத்திருக்கின்றனர். ஊரடங்கு அறிவித்த நிலையில், பல நிறுவனங்கள், பணி ஆணையை சில மாதங்கள் நீட்டித்துள்ளன.அதிலும் சில நிறுவனங்கள், 'எக்காரணம் கொண்டும், பணி ஆணையை ரத்து செய்யமாட்டோம்; ஊரடங்கு முடிந்தபின், தேர்வு செய்த நபர்களை பணிக்கு அமர்த்துவோம்' என, அறிக்கை யும் விட்டன.
கோரிக்கை
இந்நிலையில், சில குறிப்பிட்ட மென்பொருள் நிறுவனங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பணி ஆணையை ரத்து செய்து, தேர்வு செய்த நபர்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக தகவல் அனுப்பி உள்ளது.இதனால், ஏற்கனவே பார்த்த வேலையை விட்டு, ஊரடங்கால் மூன்று மாதமாக சம்பளம் இல்லாமல் வீட்டில் முடங்கியதுடன், புதிய வேலையும் இல்லாமல், அப்பாவி இளைஞர்கள், நிர்கதியாக நிற்கின்றனர். பணி ஆணை வழங்கியவர்களுக்கு, ஊரடங்கு முடிந்தபின் வேலை வழங்குவதுடன், ரத்து செய்த பணி ஆணையை வாபஸ் பெற, மென்பொருள் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Wednesday, 8 July 2020
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
http://dlvr.it/RbCRhV
அமேசானுடன் ஒப்பந்தம். கேனு ரீவ்ஸுடன் மேட்ரிக்ஸ் 4.. அதிரடி காட்டும் நடிகை பிரியங்கா சோப்ரா
http://dlvr.it/RbCRgl