காடுகளில் வாழக்கூடிய வங்கப் புலிகளின் எண்ணிக்கை அடர்த்தி மிகுந்த பகுதியாக இந்த முச்சந்திப்பு பகுதியே உள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை, கர்நாடகாவின் பந்திப்பூர், கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் என இவை மூன்றும் இணைந்த பகுதியே பல்லுயிர் வளம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.tiger
அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளின் பாதுகாப்பே இங்கு முதன்மையான நோக்கம் என்பதால், அவற்றோடு பல்லுயிரிகளும் சேர்த்தே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளிலும் அதிகரிக்கும் மக்கள்தொகை பெருக்கம், கட்டுமானங்கள், வேளாண்மை போன்ற பல காரணங்களால் இவற்றின் வாழிட பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி வருகிறது.
அதே போல், பந்திப்பூர் மற்றும் வயநாடு பகுதிகளில் புலி - மனித எதிர்கொள்ளல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புலி தாக்கி மனிதர்கள் கொல்லப்படுவதும், மனித தவறுகளால் புலிகள் இறப்பதும் தொடர்கின்றன.tiger found dead
கடந்தவாரம் பந்திப்பூர் பெகூர் பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்கப் புலி ஒன்று இறந்து கிடந்தது. இதோடு சேர்த்து 2019 முதல் தற்போதுவரை பந்திப்பூரில் 6 புலிகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் தற்போது வயநாடு மூடக்கொள்ளி பகுதியில் மூன்றே வயதான பெண் புலி ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் புலியின் இறப்பு குறித்து பேசிய வயநாடு வனத்துறை அதிகாரி, ``வயநாடு மூடக்கொள்ளி தேன்குழி குறிச்சாடு வனப்பகுதியில் உள்ள அகழி ஒன்றில் புலி இறந்து கிடப்பதாக மின் ஊழியர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். நாங்கள் குழுவினருடன் சென்று பார்த்தோம். சுமார் 3 வயதான பெண் புலி இறந்திருப்பதை உறுதி செய்துள்ளோம். இந்த இளம் பெண் புலியின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.tiger found dead
புலிகளின் எண்னிக்கை, அவற்றின் இறப்பு , இறப்புக்கான காரணம் போன்றவற்றை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
http://dlvr.it/RcSBzk
http://dlvr.it/RcSBzk