கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் மிக்கியமான ஒன்று மூணாறு. இந்தப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தோட்ட நிர்வாகத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடுமையாகப் பெய்து வரும் மழை காரணமாக மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளன. மூணாறை அடுத்த ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இடையே மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.மூணாறு
இந்தநிலையில், அமைச்சர் முரளிதரன் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் முழுவதும் இரவு வேளைகளில் நடக்காமல் பகல் வேளைகளிலேயே நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மண் சரிவு ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் காட்டாற்றில் இருந்து ஆறு உடல்கள் மற்றும் மண்ணில் இருந்து 20 பேரில் உடல்கள் என மொத்தம் 26 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மீட்டுள்ளனர். மண் சரிவில் சிக்கிய 12 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.மூணாறு
மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் சகதி அதிகமாக இருப்பதாலும் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு ஹிட்டாச்சி வாகனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `கயத்தாரைச் சேர்ந்த 55 பேரின் நிலை?’ - கலங்கும் உறவினர்கள்
http://dlvr.it/RdJG31
http://dlvr.it/RdJG31