கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி எனும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 25 வீடுகளில் வசித்த 82 பேர் மண்ணில் புதையுண்டனர். அதிஷ்டவசமாக 11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட போதிலும், 71 பேர் பலியாகினர். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல், மண்ணில் புதையுண்ட உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.சம்பவ இடத்தின் அருகே ஓடும் நீரோடை
Also Read: மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!
அந்த வகையில், 7-ம் தேதி 17 உடல்கள், 8-ம் தேதி 9 உடல்கள், 9-ம் தேதி 17 உடல்கள், 10-ம் தேதி 6 உடல்கள், 11-ம் தேதி 3 உடல்கள், 12-ம் தேதி 3 உடல்கள் மண்ணில் இருந்து மீட்கப்பட்டன. 13-ம் தேதி தேடுதலில், உடல்கள் ஏதும் கிடைக்கவில்லை. நேற்றைய தினம் 1 உடல் மீட்கப்பட்டது. மொத்தம் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 நபர்களின் உடல்கள் இன்று 9வது நாளாகத் தேடப்பட்டு வருகிறது.சம்பவ இடத்தின் அருகே ஓடும் நீரோடை
இந்நிலையில், நிலசரிவு ஏற்பட்ட இடத்தில் அருகே ஓடக்கூடிய நீரோடையில், உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நீரோடையானது, தேயிலைத் தோட்டங்கள் வழி சென்று, வனத்திற்குள் செல்வதாலும், தொடர் மழை காரணமாக, நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதாலும், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ள சூழலில், நீரோடையில் உடல்களைத் தேடும் பணி இன்று முதல் நடக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்தின் அருகே ஓடும் நீரோடை
இது தொடர்பாகத் தேவிக்குளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் நம்மிடையே பேசியபோது, ``நீரோடையில் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதனால், இன்று 500 நபர்கள் கொண்ட மீட்புக் குழு நீரோடையில் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர். கிலோமீட்டருக்கு 100 நபர்கள் வீதம் 5 கிலோமீட்டர் தூரம் இன்று தேடுதல் பணி நடக்க உள்ளது. விரைவில், அனைவரது உடல்களையும் மீட்டுவிடுவோம்” என்றார்.
Also Read: மூணாறு: `கண்டன கோஷத்துடன் பினராயி விஜயன் காரை மறித்த பெண்!’ - யார் இந்த கோமதி?
http://dlvr.it/RdhqV5
http://dlvr.it/RdhqV5