நாடாளுமன்றம் கூடும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது உள்ளிட்டவைகளுக்காக மத்திய அரசுக்கு லோக்சபா டி.வி சானல் உள்ளது. ஆனால், மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் நடக்கும் விவாதங்கள், உறுப்பினர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப தனி தொலைகாட்சி சேனல் கிடையாது. இந்தநிலையில், நாட்டில் முதல்முறையாக சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கேரள அரசு `சபா டி.வி’ என்ற டி.வி சேனலை கேரள புத்தாண்டு தினமான நேற்று தொடங்கியுள்ளது. சபா டி.வி தொடக்க நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில்,``கேரளம் இந்திய அளவில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அதன் ஒருபகுதியாக சட்டசபைக்கான தனித் தொலைகாட்சி ஒன்றை, நாம் தொடங்கியுள்ளோம். நாடாளுமன்றமும், மக்களாட்சியும் நிலைநிற்கும் ஒவ்வொரு நாட்டிலும் சபை நடவடிக்கைகள் மக்களுக்கு சென்று சேரவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.கேரள முதல்வர் பினராயி விஜயன்
மக்கள் பிரதிநிதிகள் சபையில் அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கைகள் மக்களுக்கு சென்றுசேருவது அவசியம். அந்த மக்கள் பிரதிநிதிகள், எப்படி தங்களுக்கானக் கடமைகளை செயல்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். முன்பு, சட்டசபை கூடும்போது செய்தித்தாள்களில் அதிகமான தகவல்கள் வெளியாகும். கேள்வி- பதில்களை அப்படியே பிரசுரிக்கும் செய்தித்தாள்கள் இருந்தன. ஒவ்வொருவருடைய பேச்சுக்களிலும் சிறிய பகுதிகளையாவது வெளியிடும் வழக்கம் இருந்தது.
Also Read: கேரளா: கிரையோஜெனிக் இன்ஜின் பொய் வழக்கு - நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி இழப்பீடு!
புதிய உறுப்பினராக நான் வந்தபோது, அதுபற்றியும் செய்தி வெளியானது. பத்திரிகை செய்திகளில் பின்னர் மாற்றம் வந்தது. மாற்றத்தின் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். பின்னர் தொலைகாட்சி சேனல்கள் வந்தபிறகு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சமயத்தில், கேள்வி-பதில்களை ஒளிபரப்பியதால், அது இன்னும் அதிகமாக மக்களை சென்றடைந்தது. அதன்பிறகு நல்லபடியான, விருப்பமுள்ள பகுதிகளைப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. எனவே, இதில் நல்லபடியான மாற்றத்தை சபா டி.வி ஏற்படுத்தும்.சபா டி.வி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன்
நம் நாட்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த சபா டி.வி மூலமாக நம் மாநில சட்டசபையின் நடவடிக்கள் முழுமையாக மக்களுக்கு சென்று சேரும் நிலை ஏற்படும். இது முதற்கட்டம் என்பதால் சட்டசபையின் வரலாறு, முக்கியஸ்தர்களின் நேர்காணல் போன்றவை ஒளிபரப்பப்படும். விரைவில் முழுமையான தொலைக்காட்சி சேனலாக மாறும். சட்டசபையில் நமது செயல்பாடுகளை மக்கள் தெரிந்துகொள்ள அதிக வாய்பு இதன்மூலம் ஏற்படும். இளைஞர்களும், மாணவர்களும் இந்த டி.வி மூலம் பயன்பெறுவார்கள்" என்றார்.
http://dlvr.it/RdsZqV
http://dlvr.it/RdsZqV