ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நிதி, அடையாள ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண். வருமான வரி செலுத்துவோர் பான் அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் உள்ளன. ஆனால் விதிகளின்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்களுக்கு அனுமதி கிடையாது. முதலில் வாங்கிய பான் எண்ணை வைத்து அதிக லோன் வாங்கியிருந்தால், சிலர் வேண்டுமென்றே ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். சிலர் தங்கள் வருமான வரியைக் குறைக்க பல பான் கார்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் வருமான வரி சட்டம் பிரிவு 272பி -இன் கீழ், ஒருவரிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். சில நேரங்களில் தற்செயலாக, ஒரு பான் கார்டு தொலையும்போது, அதன் நகலைப் பெறுவதற்கு பதிலாக, புது கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அசல் அட்டையில் பெயரை புதுபிப்பதற்கு பதிலாக, பெயரை மாற்றி புது கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பல பான் கார்டுகள் வைத்திருப்பதை கண்டறிவது இப்போது எளிது இப்போது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப் பட்டதால் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளைக் கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாகிவிட்டது. எனவே பிரிவு 139ஏ இன் விதிகளுக்கு இணங்கத் தவறுபவர்களுக்கு வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்தால் என்ன செய்வது? எந்தக் காரணத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால், அதை ரத்து செய்துவிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் வைத்திருக்கவேண்டும். ஆன்லைன் மற்றும் நேரில் பான் கார்டை ரத்து செய்யலாம். ஆன்லைன் முறை: என்.எஸ்.டி.எல் வலைதளத்திற்குச் செல்லவும். ‘’Application Type’’ என்ற பகுதியில் இருக்கும், மாற்றங்கள் அல்லது திருத்தம்/ பான்கார்டு மறுபதிப்பு(இருக்கும் பான் தரவில் எந்த மாற்றமும் இல்லை) (Changes or Correction in existing PAN Data/Reprint of PAN Card (No changes in existing PAN Data)) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். படிவத்தை நிரப்பி, சமர்ப்பிக்கவும். இந்த படிவத்தை சமர்ப்பித்தபிறகு, உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்டு, ஒரு டோக்கன் எண் உருவாக்கப்பட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். எதிர்காலக் குறிப்புகளுக்காக உங்கள் டோக்கன் எண்ணைக் குறிப்பிட்டு, பான் விண்ணப்பப் படிவத்துடன் (PAN Application Form) தொடரவும். அங்கிருந்து புதிய வலைபக்கத்துக்குச் செல்லும். புதிய வலைபக்கத்தின்மேல், ‘’ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை இ-சைன் மூலம் சமர்ப்பிக்கவும். விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் சமர்பிக்க விரும்வும் பான் எண்ணைக் குறிப்பிடவும். உங்கள் தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு மற்றும் பிற விவரங்களை நிரப்பவும். நீங்கள் திருப்பி செலுத்த விரும்பும் பான்களை குறிப்பிட்டு, ’அடுத்து’ பட்டனை அழுத்தவும். நீங்கள் சமர்பிக்க விரும்பும் அடையாளம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஸ்கேன் செய்த உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பான் கார்டை திருப்பிதரக் கோரினால், ஒப்புதல் ரசீதில் கையொப்பமிடவும். உங்கள் விவரங்களை சமர்பித்தபிறகு, விண்ணப்ப படிவத்தின் மாதிரிகாட்சி கிடைக்கும். உங்கள் விவரங்களை சரிபார்த்து, தேவையான இடங்களில் திருத்தம் செய்துகொள்ளலாம் அல்லது பணம் செலுத்த தொடரலாம். கோரிக்கை வரைவு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்தி முடித்ததும், பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒப்புதலைக் காணலாம். எதிர்கால குறிப்புகளுக்காக ஒப்புதலின் நகலை ப்ரிண்ட் செய்துகொள்ளலாம். ப்ரிண்ட் செய்யப்பட்ட ஒப்புதலின் நகலை என்.எஸ்.டி.எல் e-Govக்கு இரண்டு புகைக்கடங்களுடன் அனுப்பவும். ஒப்புதலை அனுப்புவதற்கு முன், உறையின்மேல், பான் ரத்து செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் எண்ணுடன் குறிப்பிடவும். கையொப்பமிட்ட ஒப்புதலுடன் கோரிக்கை வரைவு(தேவைப்பட்டால்) மற்றும் தேவையான ஆவணங்கள்(ஏற்கனவே உள்ள பான் சான்று ஏதேனும் இருந்தால்), அடையாளம், முகவரி மற்றும் பிறந்த தேதி உடன் அனுப்பவும். நேரில் சமர்ப்பிக்கும் முறை: பானில் மாற்றம் அல்லது திருத்தத்திற்கான படிவம் 46ஏவை நிரப்பி, கூடுதலாக இருக்கும் பான் அட்டை மற்றும் படிவத்தை அருகிலுள்ள UTI அல்லது NSDL TIN மையத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் வருமான வரி தாக்கல் செய்யப்படும் மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். பான் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, திருப்பி கொடுக்க விரும்பும் பான் கார்டு எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடவும். கடிதத்தை அருகிலுள்ள வரி அலுவலகத்திற்கு அனுப்பவும்.
http://dlvr.it/RdtkwG