இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறார். பலமுறை பாகிஸ்தானிடம் இந்தியா இது குறித்துத் தகவல் அளித்தும், பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என வாதம் செய்துவந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக கராச்சியில் தாவூத் இருக்கும் முகவரி வரை வெளியிட்டிருக்கிறது பாகிஸ்தான். பாதுகாப்புப் படை
1993-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். இந்தத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 700-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தால் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலுக்கான நபராக அறியப்பட்டார் தாவூத்.
இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகளல் தேடப்படும் குற்றவாளியாக இருந்தாலும், பாகிஸ்தானில் இருந்தபடி பல்வேறு தொழில்களை நடத்திவந்தார். சூதாட்டம், கடத்தல் எனப் பல்வேறு சட்ட விரோதத் தொழில்களில் அவ்வப்போது தாவூத் பெயர் வந்து செல்லும். என்றாலும், தாவூத் இப்ராஹிமுக்கு தாங்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவந்தது.தாவூத் இப்ராஹிம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து இயங்கும் `ஃபைனான்ஸியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்’ எனும் சர்வதேச அமைப்பு, `தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் திட்டத்தை 2019-ம் ஆண்டின் இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கூடுதல் கால அவகாசம் கேட்டது.
இந்த நிலையில்தான் தற்போது, தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஹஃபீஸ் சயீத் உள்ளிட்ட தீவிரவாதிகள் குறித்தும், 88 தீவிரவாத அமைப்புகள் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். அதன்படி, பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள கிளிஃப்டன் பகுதியில், சௌதி மசூதிக்கு அருகே இருக்கும் 'ஒயிட் ஹவுஸ்’ வீட்டில் தாவூத் இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த முறையும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், ஃபைனான்ஸியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பால் பாகிஸ்தான் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தான் - இந்தியா
தற்போது தாவூத் பாகிஸ்தானில் இருப்பதை அந்நாடு உறுதி செய்திருக்கும் நிலையில், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
http://dlvr.it/Rf9lNr
http://dlvr.it/Rf9lNr