இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனாரரின் 149-ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” என்ற சுதேசிய கப்பல் நிறுவனத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசின் கப்பல் வணிகத்தின் பொருளாதாரச் செல்வாக்குக்கு, மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தவர் வ.உ.சி! உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்! டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர் உரிமைகளை மீட்டெடுக்க தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்த தியாக சீலர், வரலாற்றில் வாழும் போராளி வ.உ.சி அவர்களை வணங்கி போற்றுகிறேன். கனிமொழி, எம்.பி. ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.
http://dlvr.it/Rg2Q84
http://dlvr.it/Rg2Q84