தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் பெரும்பான்மையான ஏலக்காய் தோட்டங்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமானது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தங்களுக்குச் சொந்தமான ஏலக்காய் தோட்டங்களுக்கு, விவசாயிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது.குமுளி சோதனைச் சாவடி
Also Read: `பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
இ-பாஸ் முறையிலும் கேரள அரசு, கடுமையாக விதிகளை வகுத்ததால், ஏலக்காய் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். விவசாயிகள் மட்டுமல்லாமல், ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். ஏலக்காய் சீசன் என கூறப்படும் ஜூன், ஜூலை மாதத்தில் தோட்டங்களைச் சீர் செய்து விளைச்சலை பெருக்க முடியாத நிலை உருவானது. இதனால், விவசாயிகள் நஷ்டமடைந்தது மட்டுமல்லாமல், பலரும் தங்களது தோட்டங்களை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இ-பாஸ் முறையில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதனைக் கேரள அரசு கண்டுகொள்ளவில்லை.குமுளி எல்லைப் பகுதி
இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்த நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தங்களது ஏலக்காய் தோட்டங்களுக்கு இ-பாஸ் இன்றி எளிதாக சென்றுவர, கேரள அரசு அனுமதி கொடுக்குமா என எதிர்பார்ப்பில் இருந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கேரளாவிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.!
Also Read: இடுக்கி கனமழை: `நீரில் மூழ்கிய ஏலக்காய் தோட்டங்கள்!’ - தவிக்கும் தமிழக விவசாயிகள்குமுளி சோதனைச் சாவடிகேரள அதிகாரிகள்மாநிலத்திற்கு வர ’Covid19 Jagratha’ என்ற இணையப் பக்கத்தில், பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் அனுமதி கொடுக்கப்படும்.
இதற்கிடையில், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றும், எல்லைக்குச் செல்லும் அனைவரையும் கேரளாவிற்குள் அனுமதிக்கின்றனர் என்றும் நேற்று வதந்தி பரவியது. இதனை நம்பி, சில ஏலக்காய் விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் குமுளி சோதனைச் சாவடிக்குச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கேரள வருவாய்துறை அதிகாரிகள், ’இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது.!’ என்று கூறி திருப்பி அனுப்பினர்.குமுளி சோதனைச் சாவடி
Also Read: ‘இ-பாஸ் விதிமுறைகளைக் கடுமையாக்கிய கேரளம்’ - தவிக்கும் தேனி ஏலக்காய் விவசாயிகள்!
நம்மிடையே பேசிய ஏலக்காய் விவசாயி ஒருவர், “கொரோனா ஆரம்பித்ததில் இருந்து எங்க தோட்டத்திற்கு சரியா போய் வர முடியல. அங்க இருக்க ஆளுகளை வைத்து தான் வேலை செஞ்சுட்டு இருக்கோம். காய் எடுப்பும், பராமரிப்பும் சரியா பண்ண முடியல. மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்தும், கேரள அரசு பிடிவாதமாக இ-பாஸ் வேண்டும் என்றும், இடுக்கி மாவட்டத்திற்குள் வந்தால் கட்டாய 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றது. தோட்டத்திற்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்றாலும் இதே நிலை தான். இரு மாநில அரசுகளும் பேசி, ஏலக்காய் விவசாயம் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும்” என்றார்.குமுளி சோதனைச் சாவடி
கேரள வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ``மாநிலத்திற்கு வர ’Covid19 Jagratha’ என்ற இணையப் பக்கத்தில், பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் அனுமதி கொடுக்கப்படும். மாநிலத்திற்குள் வந்த பின்னர், கட்டாய 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதனை, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். ஏலக்காய் விவசாயிகள், தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்களை அழைத்துவந்தால், அது குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும். எத்தனை தொழிலாளர்களை வேண்டுமானாலும் அழைத்துவரலாம். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தேவையான வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து பின்னர் அனுமதி கொடுக்கப்படும். இதில் எந்த மாற்றமும், தளர்வும் இல்லை. அப்படி தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்தால், அது குறித்து தெரிவிக்கப்படும்.” என்றனர்.
http://dlvr.it/Rg6Q9S