தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக அமீர் கானின் மகள் ஐரா கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர் கானின் மகள்தான் ஐரா கான். இவர் கடந்த வருடம், ‘யூரிபெடீஸ் மெடியா’ என்கிற மேடை நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் ஐராவிற்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 10) உலக மனநல தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஐரா கான் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறுகையில், ‘’ஹாய், நான் மனச்சோர்வடைந்துள்ளேன். நான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் ஒரு மருத்துவரின் ஆலோசனையில் உள்ளேன். தற்போது நான் ஓரளவு பரவாயில்லாமல் இருக்கிறேன். இப்போது, நான் மன ஆரோக்கியத்திற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன். ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களை எல்லாம் ஒரு பயணம் மூலமாக பார்த்து என்ன நடக்கிறது என்று பார்க்க முடிவு செய்துள்ளேன். நான் சொல்ல பல விஷயங்களைப் பற்றி யோசித்தேன். நான் என்ன சொல்ல வேண்டும்? நான் ஏன் இதைச் செய்கிறேன்? சொல்ல நிறைய இருக்கிறது. எனவே இந்த பயணத்தில் என்னுடன் வாருங்கள். உலக மனநல தின வாழ்த்துகள்" என்று பேசியுள்ளார்.
http://dlvr.it/RjNJt6
http://dlvr.it/RjNJt6