கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இதையடுத்து `காஷ்மீரில், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நிலம் வாங்கலாம்’ என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்கு அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. தீவிரவாத அமைப்புகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.சத்பாலின் உடல்
இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை (டிச. 31, 2020) அன்று காஷ்மீரில் நகைக்கடை அதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. காஷ்மீரின் ஶ்ரீநகரில் அமைந்துள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதி சாராய் பாலா. இந்த மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர், அந்தப் பகுதியிலுள்ள நகைக்கடைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அந்த நகைக்கடை அதிபரை சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு காஷ்மீர் போலீஸார் விரைந்திருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள்ளாகவே அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.
இது குறித்து ஶ்ரீநகர் காவல்துறையினர், ``இந்தப் பரபரப்பான கடைவீதியில் அமைந்திருக்கும் பிரபல நகைக்கடையான நிசால் ஜுவல்லர்ஸின் உரிமையாளர் சத்பால் நிசால் (62) என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்'' என்று தெரிவித்தனர்.ஜம்மு காஷ்மீர் காவல்துறை
Also Read: ரூ.86,188 கோடி ; மல்லையா, நீரவ் மோடியை விட 10 மடங்கு அதிகக் கடன் - நெருக்கடியில் அம்பானி?
இதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையில், சத்பால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் 50 ஆண்டுகளாக காஷ்மீரில் வசித்துவருகிறார் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், சமீபத்தில்தான் சத்பால், காஷ்மீரின் குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருப்பது தெரியவந்தது.ஶ்ரீநகர் காவல்துறையினர்முதற்கட்ட விசாரணையை அடுத்து நாங்கள் சிலர்மீது சந்தேகம் கொண்டிருக்கிறோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒருவரின் முகம் மட்டும் சிக்கியிருக்கிறது. இதைவைத்து கூடிய விரைவில் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிப்போம்.
இந்தநிலையில், The Resistance Front என்கிற அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ``குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் எஜென்ட்டுகள். நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். எங்களுக்கு உங்கள் பெயர்கள் தெரியும், எங்கு வசிக்கிறீர்கள் என்பது தெரியும், என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்களைத் தேடி நாங்கள் வருவோம்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.TRF
Also Read: 1846 முதல் 2019 வரை! - காஷ்மீர் பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInfographics
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில், இதுவரை 10 லட்சம் பேர் குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர்வாசிகள்தான். ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் குடியேற்றச் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து தரவுகள் எதுவும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.உள்ளூர் பயங்கரவாத அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை, காஷ்மீரில் வாழும் பிற மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
http://dlvr.it/Rpmz1r