உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் உள்ள அசலட்கஞ்ச் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
10-ம் வகுப்பு படிக்கும் மாணவியான அந்த சிறுமி , கடந்த சில நாட்களாகத் தனது வீட்டின் அருகே வசித்து வரும் இரண்டு இளைஞர்களால் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாகி வந்திருக்கிறார். இதை வெளியில் சொன்னால் தனது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கருதி அமைதியாகவே இருந்துள்ளனர்.
எனினும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவி தற்கொலை
அவரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் காவல் துறையினர் சிறுமியின் அறையைச் சோதனையிட்டதில் சிறுமி எழுதிய ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் இரண்டு இளைஞர்களின் பாலியல் துன்புறுதலால் தான் தான் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.
இதனடிப்படையில் இரண்டு இளைஞர்களையும் கைது செய்த, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்ற மற்றொரு சம்பவமும் உத்தரபிரதேச பான்டா நகரில் நடந்துள்ளது. இதில் சிறுமியை 15 வயதுக்கும் குறைவான மூன்று சிறுவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர், இதில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மீதி இருவரைத் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://dlvr.it/RrWlRv
http://dlvr.it/RrWlRv