உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாத்ரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.க-வைச் சேர்ந்த தேஜ்பால் நகர் (Tejpal Nagar) இருந்து வருகிறார். இவர் கிரேட்டர் நொய்டாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேஜ்பாலின் குடும்பத்தினர் தாத்ரி காவல் நிலையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். அந்த மனுவில், தேஜ்பால் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பா.ஜ.க எம்.எல்.ஏ தேஜ்பால் நகர்
பாஜக எம்.எல்.ஏ., தேஜ்பால் நகர், தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு மிரட்டல் செய்தி வந்துள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்வதாக வாட்ஸ்அப் கால் மூலம் மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் செய்தியை விடுத்தவர், `பிரதமர் மோடியிடமிருந்து விலகி இருக்குமாறு’ கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: விகாஸ் துபே வியாபித்த உத்தரப் பிரதேசம்… யோகி ராஜ்ஜியமா, கேங்ஸ்டர் ராஜ்ஜியமா?
இந்த புகாரின் அடிப்படையில், தாத்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எம்.எல்.ஏ-வுக்கு வந்த மிரட்டல் பாகிஸ்தானிலிருந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பா.ஜ.க எம்.எல்.ஏ தேஜ்பால் நகர்
இதேபோன்று, சதர் எம்.எல்.ஏ-வும் உத்தரப்பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான சரிதா பதௌரியாவுக்கும் (Sarita Bhadauria) இரண்டு நாள்களுக்கு முன்னர் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு வந்த அழைப்பும் பாகிஸ்தானிலிருந்து வந்ததும், வாட்ஸ் அப் மூலமே மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ-களுக்கு தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் வருவதையடுத்து, இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
http://dlvr.it/Rrmw0D
http://dlvr.it/Rrmw0D