அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்மந்தி இளங்கோவன் நடத்தும் பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருதை ஒட்டி, கடந்த சில தினங்களாகவே வருமானவரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். இன்று ஒருசில கல்வி நிறுவனங்களில் சோதனையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில், தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமானவரித்துறையினர், தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் காவல்துறையினர் அனைவரும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சம்பத்தின் சம்மந்தியான தனியார் பள்ளிக் கூட்டமைப்புகளின் மாநில செயலாளரான இளங்கோவனுக்கு சொந்தமான பள்ளி இது. சோதனை முடிந்தபின்னர்தான் இதுகுறித்த விவரங்கள் தெரியவரும். இதற்குமுன்பு திமுகவைச் சேர்ந்த எ.வ வேலு மற்றும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RwWt11
http://dlvr.it/RwWt11