தமிழக முதலமைச்சராக வரும் 7-ஆம் தேதி பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், திமுக கூட்டணி கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார்.
http://dlvr.it/RyxNfL
http://dlvr.it/RyxNfL