மும்பையில், கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிரச்னையைச் சரியாகக் கையாளாததால், மும்பை போலீஸ் கமிஷனர் பிரதீப் சர்மா இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே வெடிகுண்டுகள் இருந்த காரின் உரிமையாளர் மன்சுக் கிரண் கொலைசெய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இந்த வெடிகுண்டுச் சம்பவம் மற்றும் கிரண் கொலை தொடர்பாக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டும், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியுமான சச்சின் வாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சி விசாரித்துவருகிறது.அம்பானி வீட்டின் நுழைவு வாயில்
இது தவிர இந்த வழக்கில் மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மாவை தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இன்று காலையில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், உள்ளூர் போலீஸாரின் துணையோடு அந்தேரியிலுள்ள பிரதீப் சர்மா வீட்டில் ரெய்டு நடத்தி, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார். ஏற்கெனவே பிரதீப் சர்மா கடந்த ஏப்ரல் மாதம் தேசியப் புலனாய்வு ஏஜென்சி முன்பு ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இப்போது பிரதீப் சர்மா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ள சச்சின் வாசும், பிரதீப் சர்மாவும் மிகவும் நெருக்கமானவர்கள். தேசியப் புலனாய்வு ஏஜென்சிக்குக் கிடைத்துள்ள சில ஆதாரங்களை உறுதி செய்துகொள்ள பிரதீப் சர்மாவைக் கைதுசெய்துள்ளனர். அதோடு அம்பானி வீட்டுக்கு அருகில் வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் உரிமையாளரைக் கொலை செய்வது தொடர்பாக சச்சின் வாஸ் பிரதீப் சர்மாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். சச்சின் வாஸ்
கிரண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தனது போன் வாட்ஸ்அப்பிலிருந்து கால் செய்துள்ளார். அதன் சிக்னல் அந்தேரியில் காட்டுகிறது. அந்தேரியில்தான் பிரதீப் சர்மா இருந்திருக்கிறார். இது குறித்துத் தெளிவுபடுத்திக்கொள்ளவும் தேசியப் புலனாய்வு ஏஜென்சி முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரதீப் சர்மா நாலாசோபாரா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதற்கு முன்பு அதாவது, பணியிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறும் முன்பாக தானேயில் மிரட்டிப் பணம் பறித்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவராகப் பணியாற்றிவந்தார். அவர் பணியில் இருந்தபோது, தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கேஷ்கர் என்பவரைக் கைதுசெய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Also Read: அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் - ஸ்டார் ஹோட்டலில் தங்கி, திட்டம் தீட்டிய அதிகாரி
பணியில் இருந்தபோது பிரதீப் சர்மா மும்பையில் ஆதிக்கம் செலுத்திவந்த பல கிரிமினல்களை என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்து `என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெயர் எடுத்தார். ஆனால், கிரிமினல்களுடன் தொடர்புவைத்திருந்ததாகக் கூறி, மாநில அரசு பிரதீப் சர்மாவை 2008-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்தது. ஆனால் 2009-ம் ஆண்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பிரதீப் சர்மாவின் வாழ்க்கையை மையமாகவைத்து மராத்தியில் படமும் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S1v38b
http://dlvr.it/S1v38b