இந்தி மற்றும் ஆன்மீக இசையமைப்பாளரும், டி சீரியஸ் கேசட் உரிமையாளருமான குல்ஷன் குமார் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தொழில் போட்டி காரணமாக மும்பை அந்தேரி ஜுகுவில் கோயிலுக்கு சென்றுவிட்டு வெளியில் வந்த போது 3 பேர் கொண்ட கும்பபால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குல்ஷன் குமார் உடலில் 16 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலையில் தொடர்புடையவராக கருதப்பட்ட இசையமைப்பாளர் நதீம் அக்தர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். Gulshan kumar
தொழில் போட்டி காரணமாக பணம் கொடுத்து இக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ரமேஷ் தொரானி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் குல்ஷல் குமாரை கொலை செய்ய தாவூத் இப்ராகிம் கூட்டாளி அபு சலேமிற்கு 25 லட்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இக்கொலையில் ஈடுபட்ட அப்துல் ரஃப் மெர்ச்சண்ட் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான். மொத்தம் இக்கொலை தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்துல் ரஃப்பிற்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கியது. டிப்ஸ் கேசட் உரிமையாளர் ரமேஷ் தொரானி, இசையமைப்பாளர் நதீம் , அப்துல் சகோதரர் அப்துல் ரஷீத் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. குறிப்பாக ரமேஷ் தொரானி மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மாநில அரசு முறையீடு செய்திருந்தது. மும்பை உயர்நீதிமன்றம்
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜாதவ் மற்றும் போர்க்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அப்துல் ரஃப்பிற்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும் ரமேஷ் தொரானி விடுதலை செய்யப்பட்டதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளியாக கருதப்படும் அப்துல் ரஃப் சகோதரர் அப்துல் ரஷீத்திற்கும் இக்கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். தண்டனை பெற்றுள்ளவர்கள் ஒரு வாரத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை நடந்து 24 ஆண்டுகள் கழித்து இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது. குல்ஷன் குமார் கொலை செய்யப்பட்ட நேரத்தில் மும்பையில் மாபியாக்களின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. இவ்வழக்கில் இது வரை 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
http://dlvr.it/S2rBPY
http://dlvr.it/S2rBPY